பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாலையும் கண்ணியும் 71 இருக்கிறது. தேவலோகத்து மகளிராதலின் அந்தத் துகில் மனிதர்களின் கைத் திறனல் உண்டானது அன்று. இயற்கையாகவே மென்மையும், சிவப்பு வண்ணமும் அமைந்த துகில் அது. கற்பகமரம் தந்தது போலும்! வண்ணம் தோய்க்காத பூந்துகில். இந்திர கோபப் பூச்சி என்று ஒன்று உண்டு. அதைப் பட்டுப் பூச்சி என்றும் சொல்வார்கள். கார் காலத்தில் கிலத்தில் ஊர்ந்து கொண் டிருக்கும், அதைப் போன்ற சிவப்பையுடைய துகிலே இந்த அணங்கினர் அணிந்திருக்கிருர்கள். கோபத்து அன்ன தோயாப் பூந்துகில். (இந்திர கோபப் பூச்சியைப் போன்ற, வண்ணத்தில் தோய்க்காமல் இயல்பாகவே சிவந்துள்ள மெல்லிய துகில்.) பெண்கள் தம்முடைய இடையில் மேகலை என்ற அணிகலனே அணிந்திருப்பார்கள். மேகலையில் பல வகைகள் உண்டு; பல வடிவங்கள் உண்டு. அந்த வடிவங்களுக்கு எற்றபடி அவை பெயர் பெறும். காஞ்சி என்னும் மேகலை. எட்டுக் கோவைகளையுடையது. மேகலை என்ற பெயரை யுடையது ஏழு கோவைகளைப் பெற்றது. பதினறு கோவைகளையுடையது கலாபம் என்று பெயர் பெறும். பதினெட்டுக் கோவைகளேயுடையது பருமம். முப்பத்திரண்டு கோவைகளையுடையது விரிசிகை என்ற பெயர் பெற்றது. இங்கே அணங்கினர் மென்மை உடையவராதலின் மிகக் குறைந்த வடங்கள் ஆகிய ஏழு கோவைகளைக் கொண்ட மேகலை என்பதை அணிந்திருக்கிருர்கள். ஏழு வடமாக இருந்தாலும் ஒவ்வொரு வடத்திலும் பற்பல மணிகளைக் கோத்திருக்கிருர்கள். பல்காசு கிரைத்த சில்க்ாழ் அல்குல். (பல மணிகளைக் கோத்த ஏழு வடமாகிய மேகலேயை அணிந்த இரகசிய உறுப்பை-உடையவர்கள் என்று சொல்ல வருகிருர்.)