பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 திருமுருகாற்றுப்பட்ை விளக்கம் இதழ்களைக் கிள்ளியிடுகிரு.ர்கள். சிவப்புக்குப் பக்கத்தில் லேம் இருந்தால் விட்டு விளங்கும் அல்லவா? நடுவில் குவளே இதழ்களும், அவற்றைச் சுற்றி வெட்சி இதழ்களும் நன்ருக இணைந்து அமைந்திருக்கின்றன. அதற்கு மேல் தலையின் ஒரு பக்கத்தில் சீதேவி என்னும் தலையாபரணத்தைச் குட்டிக் கொள்கிருர்கள். வலம்புரி என்ற மற்ருேர் ஆபரணத்தை வேறு பக்கத்தில் வைத்துக்கொள்கிருர்கள். அவர்களுடைய நெற்றியில் மற்ருெரு தக் க்கோலம் வந்து தொங்குகிறது. அந்த நெற்றியில் திலகம் இட்டிருக் கிருர்கள். அது நல்ல மணத்தை வீசுகிறது. அங்கே வந்து தொங்கும் தலைக்கோலம் வாயைத் திறந்து கொண்ட மகர மீனப்போல விளங்குகிறது. இப்போது சுட்டி என்று சொல் கிருர்களே அதைப் போன்ற ஆபரணம் அது. மகர மீனின் அங்காந்த வாய்போல் இருப்பதனால் அதற்கு மகரப் பகுவாய். என்றே பெயர். அவர்கள் தம்முடைய கூந்தலை கன்ருக வாரி உச்சியில் கொண்டையாக முடித்திருக்கிருர்கள். அந்தக் கொண்டைக்கு நடுவில் குளிர்ந்த சண்பகப் பூவைச் செருகியிருக்கிருர்கள். கொண்டையின் மேலே கரிய புற. இதழையும், மேலே பிசிரையும் உடைய மருதம் பூக்களே |ணிந்திருக்கிருர்கள். அவற்றைக் கொத்தாகவே கொண்க டயின் மேலே வைத் திருக்கிரு.ர்கள். கொண்டை. நடுவில் சண்பகப் பூவும், மேலே மருதம் பூக் கொத்தும் சேர்ந்து ஒளிவிடுகின்றன. இனி அவற்றையும் சுற்றிச் செக்கச் செவேல் என்ற அரும்புகளே மாலேயாகக் கட்டி, எல்லே கோலி வைத்தாற்போல அணிந்திருக். கிரு.ர்கள். அந்தச் செவ்வரும்பு கன்ருக மலர்வதற்கு, முன நீருக்குள்ளே இருந்தவை. கன்ருக மலர்ந்தால் அதன் சிவப்புக் கொஞ்சம் குறையும். அரும்புப் பருவத்தில்