பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாலையும் கண்ணியும் 7s. சிவப்பு மிகுதியாக இருக்கும். அந்த அரும்புகளே மாலே யாகக் கட்டிக் கொண்டையின் கீழேயுள்ள பரப்புக்கு. எல்ல்ேயாகக் கோலிக் கட்டியிருக்கிருர்கள். துணையோர் ஆய்ந்த இணைஈர் ஒதிச் செங்கால் வெட்சிச் சீறிதழ் இடையிடுபு பைக்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளித் தெய்வ உத்தியொடு வலம்புரி வயின்வைத்துத் திலகம் தைஇய தேங்கமழ் திருநுதல் மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத் துவர முடித்த துகளறு முச்சிப் பெருக்தண் சண்பகம் செரீஇக் கருத்தகட்டு உளப்பூ மருதின் ஒள்இணர் அட்டிக் கிளைக்கவின்று எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு இணைப்புறு பிணையல் வளைஇ. (தோழிமார் சிறந்ததென்று ஆய்ந்து பாராட்டும் கடைஒத்து கெய்ப்புடன் உள்ள கூந்தலில், சிவந்த காம்பை யுடைய வெட்சி மலரின் சிறிய இதழ்களே இடையிலே வைத்து, பசிய தண்டையுடைய குவளைமலரின் தாய இதழ்களைக் கிள்ளி இட்டு, சீதேவி யென்னும் தலைக் கோலத்தோடு வலம்புரி யென்னும் தலைக்கோலத்தையும் பக்கத்தில் வைத்து. திலகத்தை அணிந்த மணங்கமழும் அழகிய வெற்றியில் வந்து மகரவாய் என்னும் அணிகலன் தாழும்படியாகப் புனேந்து, கன்ருக முடித்த குற்றமற்ற உச்சிக் கொண்டையில் பெரிய குளிர்ந்த சண்பக. மலரைச் செருகி, கரிய புற இதழையும் பிசிரையும் உடைய' மருதம்பூங் கொத்துக்களையும் வைத்து, கிளேயினின்று அழகுபெறப் பிரிந்து எழுந்து ரிேன்கீழ் உள்ள சிவந்தஅரும்பை இணைத்துக் கட்டிய மாலையை வளைய வைத்துக்கட்டி.1