பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- மாலையும் கண்ணியும் 77° எப்படியிருக்குமோ, அத்தகைய தோற்றத்தை அது. தருகிறது. - திண்காழ், கறுங்குறடு உரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை தேங்கமழ் மருதினர் கடுப்பக் கோங்கின் குவிமுகிழ் இளமுலைக் கொட்டி. (திண்ணிய வயிரமேறிய நறுமணமுடைய சந்தனக் கட்டையை அரைத்த குழம்பை வாசனை வீசும் மருதம் பூவைப் போலத் தோற்றும்படி, கோங்கமரத்தின் குவிக்க, அரும்புபோன்ற இளைய ஈகில்களின்மேல் பூசி.) - இப்படிச் சந்தனக் குழம்பை அணிந்த மார்பில் வேங்கைப் பூவின் மகரந்தப் பொடியை அப்பிக்கொள் கிருர்கள். விரிந்த மலருடைய வேங்கை மரங்கள் மலேச் சாரலில் வளர்ந்திருக்கும். அங்கிருந்து அந்தத் தாதைப் பெற்றுச் சந்தனக் குழம்பின் மேலே அப்பியிருக்கிருர்கள். அதற்கும் மேலே விளாமரத்தின் தளிர்களைக் கிள்ளி ஒருவர் மேல் ஒருவர் தெறித்துக் கொண்டிருக்கிருர்கள். அவை அழகிய சித்திரம் வனேந்தாற்போல மார்பில் சந்தனக். குழம்பில் பதிந்து அழகு செய்கின்றன. - விரிமலர் வேங்கை நுண்தாது அப்பிக் காண்வர வெள்ளில் குறுமுறி கிள்ளுபு தெறியா. (அதன்மேல் வேங்கை மரத்தில் மலர்ந்த மலரிலுள்ள நுண்ணிய மகரந்தப் பொடியை அப்பி, அழகு உண்டாகும் படி விளாமரத்தின் சிறிய தளிர்களைக் கிள்ளி மேலே தூவி.} கொடியை வாழ்த்துதல் இப்படித் தலையில் பல நிறங்களையுடைய மலர்களைச் குடி, காதில் அசோகங் தளிரைச் செருகி, மார்பில் நல்ல சந்தனத்தையும், அதன்மேல் வேங்கைப் பூர்தாதையும், அதன்மேல் விளாவின் தளிரையும் அப்பிக்கொண்டு அழகுப்.