பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆமாலையும் கண்ணியும் - 79 பெறுவான். அந்த வெற்றிக்கு அறிகுறியாகக் கோழிக் கொடி மேலே கின்று விளங்கும். அந்தக் கோழிக்கொடி வாழ்க!" என்று அலங்காரம் பெற்ற அணங்கினர் வாழ்த்து .கின்றனர். கோழி ஓங்கிய வென்றடு விறற்கொடி வாழிய பெரிதென்று ஏத்தி. (கோழி உயர்ந்து தோன்றும், வஞ்சியாது எதிர் கின்று கொன்ற வெற்றியைப் புலப்படுத்தும், கொடி கெடிது வாழ்க என்று துதித்து..} - சோலேயும் கண்ணியும் இப்படித் தங்களே அலங்களித்துக்கொண்டு பாட்டுப் .பாடி முருகனே வாழ்த்திய அணங்கினர் ஒருவர் இருவர் அல்லர் பல பேர்கள். அவர்களுடைய பாட்டு மலைச்சாரலில் எதிரொலியை எழுப்புகிறது. அவர்களுடைய உள்ளத்தை .கிறைவித்து, அவர் மேனியில் அலங்காரம் உண்டாகும்படி செய்து, எழிலுடன் விளங்குகின்ற சோலே அது. அத்தகைய சோலேயில் மரங்கள் செறிந்திருக்கின்ற சூழலில் முருகனுக் குரிய காந்தள் வளர்கிறது. மிக உயரமான இடத்தில் அந்தக் காந்தள் வளர்ந்திருக்கிறது. அங்கே உள்ள மரங் களில் குரங்குகள் கூட ஏறுவது இல்லே. அவ்விடத்தில் மலரும் காந்தள வண்டுகள் அணுகுவது இல்லை. பொது வாக, தெய்வத்திற்குரிய பூக்களே வண்டுகள் மொய்ப்ப தில்லை யென்று சொல்வார்கள். தெய்வ மகளிர் பயில் கின்ற இந்தச் சோலையில் வண்டுகள் வருவது இல்லை. மிகமிக உயரத்தில் இருக்கும் சோலே அது; தெய்வத் தன்மை பொருந்திய சோலை. அங்கே மந்தியும் அறியா மரங்கள் செறிந்த குழ்கிலேயில், வண்டுகளும் மொய்க்காமல் அலர்ங் திருக்கிற காந்தள் மலராகிய கண்ணியை அணிந்திருக் கிறவன் முருகன். - - -