பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 - திருமுருகாற்றுப்படை விளக்கம் பலருடன் . சீர்திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடிச் சூரர மகளிர் ஆடும் சோலை மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்துச் சுரும்பும் மூசாச் சுடர்ப்பூங் காக்தட் பெருந்தண் கண்ணி மிலந்த சென்னியன். (பலரும் ஒருங்கே கூடி அழகு விளங்குகிற மலேப் பக்கங்கள் எதிரொலி செய்யும்படி பாடித் தேவமகளிர் ஆடுகின்ற சோலேயில், குரங்கும் அறியாத மரங்கள் செறிந்: திருக்கின்ற சூழலில், வண்டுகளும் மொய்க்காத விளக்குப் போன்று ஒளிவிடும் காந்தள் மலராகிய பெரிய குளிர்ந்த கண்ணியை அணிந்த தலையை உடையவன். கண்ணிதலையில் குடும் சிறிய அடையாள மாலை.) காந்தள் என்பது சிவப்பாக வேலிக்காலில் முளைத் திருக்கும், அதன் மலர் கார்த்திகை விளக்குப் போலத். தோன்றும்; அதனல் கார்த்திகைப் பூ என்றும் சொல்வ. துண்டு. முருகப்பெருமான் தன்னுடைய சென்னியில் பெரிய குளிர்ந்த காந்தளங் கண்ணியைப் புனைந்திருக்கிருன், அந்தக் கண்ணி மலையிலுள்ள சோலையில் வளருவது. அந்தச் சோலே குரர மகளிர் ஆடுவது. அந்தச் சூரர மகளிர் இங்குள்ள மலர்களே எல்லாம் பறித்துத் தங்க ளுடைய கூந்தலேயும், காதையும், உடம்பையும் புனேந்து கொள்கிருர்கள். - - } இப்படி ஒன்றிைேடு ஒன்று தொடர்புடைய செய்தி களைச் சொல்லி ஒரு பெரிய ஓவியத்தை நக்கீரர் காட்டுகிருர். குரர மகளிரின் இயற்கை அழகையும், ஆடை அணிகலன் களையும், தலைக் கோலத்தையும், நன்றி அறிவினல் அவர்கள் முருகனைப் பாடி ஆடும் திறத்தையும் காட்டி, அத்தகைய வர்கள் ஆடுகின்ற சோலையில் வளர்வது முருகப்பெருமான் அணியும். காந்தளங்கண்ணி என்று சொல்லி இந்த வருண னையை முடிக்கிருர்.