பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செவ்வேற் சேய் முருகப்பெருமானுடைய சோதிப் பிழம்பைக் காட்டி, பின்பு அவனுடைய திருவடியையும் திருக்கரத்தையும் காட்டி, அப்பால் அவனுடைய திருமார்பிலுள்ள கடம்ப மாலையைக் காட்டி, காந்தளங் கண்ணியையும் நக்கீரர். காட்டினர். காங் தளங் கண்ணியைப் பற்றிச் சொல்லும் போது அழகுப் பிழம்பாகிய தேவலோக மகளிர் முருகனே வினேந்து, அலங்காரங்களைச் செய்து கொண்டு ஆடிப் பாடியதன் சிறப்பைச் சொன்னர், இனி அடுத்தபடியாக ஒரு வகைக் கூத்தைச் சொல்லப் போகிருர். முருகப் பெருமான் திருக்கரத்திலுள்ள வேலின் பெருமை யைச் சொல்ல வந்தவர், அந்த வேலோடு சார்த்திப் போர்க்களத்தின் சிறப்பை எடுத்தோதுகின்ருர். அப்படிச் சொல்லும் வகையில் அங்கே ஒரு பெண் பேய் ஆடும் கூத்தை வருணிக்கிருர், - முன்பு அழகு மயமாகிய குழ்கிலேயில் அழகே உருவாகிய அரம்பையர்கள் அழகளுகிய ஆண்டவனைப் பாடி ஆடும் ஆட்டத்தை அழகாக வருணித்தார் ஈக்கீரர். இப் போது அதற்கு நேர்மாருக வேறு ஒர் காட்சியைக் காட்டு கிரு.ர். அஞ்சுவதற்குரிய காட்சியைப் பெற்ற பேய்மகள் போர்க்களத்தில் தனக்கு வேண்டிய விருந்தை அயர்ந்து மகிழ்ச்சியுடன் ஆடுகிருளாம். அவளும் தனக்குப் பசி போக்கிய போர்க்களத்தை எண்ணி அங்கே வெற்றியை. பெற்ற முருகப்பெருமானப் பாடி ஆடுகிருளாம். வேலின் பெருமை இப்போது ஆண்டவன் திருக்கரத்திலுள்ள வேலை கினைப்பூட்டுகிருர். அது சுடரோடு கூடிய இலையை திரு-6 -