பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 திருமுருகாற்றுப்படை விளக்கம் யுடைய நீண்ட வேல். அது குரனேக் குலத்தோடு கெடுத் தது. அந்தச் சூரன் கடலுக்குள் புகுந்து ஒளித்தான். அப் போது முருகன் வேலை ஒச்சி அந்தக் கடலிலுள்ள கீரை யெல்லாம் சுவறச் செய்து சூரனைத் தடிந்தான். அந்த வேலைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்லி, பின்பு அது செய்த வீரச் செயலே விரிவாகச் சொல்ல வருகிருர், பார்முதிர் பனிக்கடல் கலங்கஉள் புக்குச் சூர்முதல் தடிந்த சுடர் இலை நெடுவேல். (பாறைகள் முதிர்ந்த குளிர்ச்சியையுடைய கடல் கலங்கும்படி உள்ளே புகுந்து அங்கே மறைந்திருந்த குரளுகிய அசுர குல முதல்வனைப் பிளந்த ஒளியையும் இலையிையும் உடைய நீண்ட வேல்.) பாறைகள் முதிர்ந்திருக்கின்ற, குளிர்ச்சியை யுடைய கடலுக்குள் புகுந்து இருந்தான் சூரன். அவன் மேல் எய்த வேல் அந்தக் கடலேக் கலக்கிவிட்டு உள்ளே புகுந்து மாமர மாக கின்ற சூரனை இரண்டு பிளவாகத் தடிந்தது. அத்த கைய சுடரையுடைய நெடுவேல் எவ்வாறு சூரனைத் தடிந்தது என்பதைச் சற்று விரிவாக மறுபடியும் சொல்கிருர், போர்க்களத்தில் பகைவர்கள் இறந்து விழ அவர்களு டைய பிணங்கள் எங்கும் பரந்து கிடக்கும். பல காலமாக உணவைப் பெருமல் பசியினுல் வாடிய பேய்கள், எங்கே போர்க்களம் இருக்கிறது என்று நாடி ஒடும். போர் விகழ்ந்தது என்ருல் பேய்களுக்குக் கொண்டாட்டம். போரின் முடிவில் போர்க்களத்தில் விழுந்து கிடக்கும் உடம்புகளே யும், அங்கங்களையும் பேய்கள் உண்டு களித்துக் கூத்தாடு வதாகச் சொல்வது கவிமரபு. பைரவர் அவ்வாறு சாபம் கொடுத்திருக்கிருர் என்பது புராண வரலாறு. அவ்வாறு