பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செவ்வேற் சேய் - 83 பேய்க்கு உணவூட்டி விருந்தயரச் செய்யும் வேள்வியைக் களவேள்வி என்று சொல்வது வழக்கம். இது புறத்திணே கயில் ஒரு துறை. இங்கே முருகப்பெருமான் தன்னுடைய வீரச் செயலினல் பேய்களுக்கு உணவளித்து மகிழ்ச்சி உண்டாகும்படியாகச் செய்கிருளும். அப்படி உள்ள போர்க்களத்தில் ஒரு பேயின் ஆட்டத்தைப் பற்றி நக்கீரர் சொல்ல வருகிருர், நாம் முன்பு பார்த்த அழகிகளாகிய அரமகளிர் கிலேக்கும், இந்தப் பேய்மகள் விலக்கும் கேர் மாறுபாடு. அது சுடர் உலகம் இது இருள் உலகம். அது அழகுப் பிழம்பு; இது அவலட்சணத் திருவுருவம். இந்தப் பேய்மகளைத் தலையிலிருந்து வருணிக்கிரு.ர். பேய்மகள் ஆடல் அவளுடைய தலே ஈரம் காணுத தலே. உலர்ந்த செடி போலப் பரட்டையாக இருக்கிறது. உலறிய கதுப்பு அது. அவளுடைய பற்கள் எப்படி இருக்கின்றன? ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் முளைத்து எழுந்திருக்கின்றது. அந்தக் கோரப் பல்லேக் கண்டாலே அச்சம் உண்டாகும். அந்தப் பல்லேயுடைய வாய் மிக்க ஆழமாக இருக்கிறது. முழு யானேயையே உள்ளே விழுங்கிவிடும் அளவுக்குப் பேராழமுடைய வாய். பிறழ் பல்லையும், பேழ் வாயையும் உடைய பேய்மகள் அவள். அவளுடைய கண்கள் எப்போதும் சுழன்று கொண்டிருக் கின்றன. அங்கிருந்து வரும் பார்வையோ கண்டவருடைய உள்ளத்தைக் கிடு கிடுக்கச் செய்கிறது. அவளுடைய காதில் அணிந்துள்ள ஆபரணம் எது தெரியுமா? அந்தக் காதில், கழன்ரும் போன்ற கண்ணுடைய கோட்டானும், கஞ்சுடைய பாம்பும் தொங்குகின்றன. சுழல் கண்ணு டைய கூகைதான் அதிலுள்ள குழை, கொடும் பாம்பு