பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செவ்வேற் சேய் - 85. போல இருக்கிறது; ஒரே கறுப்பாக இருக்கிறது. அசுர னுடைய தலை அல்லவா? அதனை எடுத்துப் பனங்காயி விருந்து நுங்கைத் தோண்டி உண்ணுவது போலத் தலையில் கண்ணேத் தோண்டி உண்ணுகிருள். அப்படி உண்டதல்ை கையில் இரத்தம் பூசிக் கிடக்கிறது. அதுதான் அவளுக்கு மருதோன்றி பொலும் கூர்மையான நகமுடைய வளைந்த விரல்கள் ஒரே இரத்தமயமாக இருக்கின்றன. அந்தத் தலையைத் தன்னுடைய கையில் ஏந்திக் கொண் டிருக்கிருள். அவள் தன் கையில் வளை அணிந்திருக்கிருள். ஆம். இரும்பு வளேயாக இருக்கக் கூடும். முன்பு நாம் கண்ட அணங்கின் ஆட்டம் பார்க்கப் பார்க்க அழகு தருவது. இப்போது பேய்மகள் ஆட்டமோ நினைத்தாலும் பகிர் என்ற உணர்ச்சியைத் தருவது. கையில் கண்ணேத் தோண்டி உண்ட கருத்தலேயை ஏந்திக் கொண்டு, பார்ப்பவர்கள் பயப் படும்படியாகக் கையை அங்கும் இங்கும் ஆட்டிக்கொண்டு ஆடுகிருள்; பாடுகிருள். அந்தப் போர்க் களத்தைப் பாடுகிருள்: முருகப்பெருமானுடைய வீரத்தையும் சேர்த் துத்தான் பாடுகிருள். பாடியாடும் போதே அவள் வாய் மாமிசத்தை அசைபோட்டுக் கொண்டிருக்கிறது. தனியாக ஆடுவது போதாது என்று வேறு பேய்மகளிரோடு கையைக் கோத்துக் கொண்டு துணங்கைக் கூத்தாடுகிருள். இப்படி ஆடும்படியாகச் சூரபன்மாவைச் சங்காரம் செய்தது அந்த வேல். - - குருதி ஆடிய கூர்உகிர்க் கொடுவிரல் கண்தொட்டு உண்ட கழிமுடைக் கருக்தல் ஒண்தொடித் தடக்கையின் ஏந்தி வெருவர வெனறடு விறல்களம் பாடித் தோள்பெயரா கிணம்தின் வாயள் துணங்கை துங்க. (இரத்தம் தோய்ந்த கூரிய நகத்தையுடைய வளைந்த விரலாலே கண்ணேத் தோண்டி உண்டு எஞ்சிய மிக்க