பக்கம்:திரும்பிப்பார்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 பாண்டியன்: நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ! வேதனைப் படும் தொழிலாளர்களின் சார்பில் நான் அந்த முதலாளியை சந்திக்கிறேன். புண்யகோடி: காட்சி 87] என் மகன்னா மகன்தான். (கட்டிக்கொள்கிறான்) (பூமாலை வீடு-காலை [பூமாலை காப்பி சாப்பிட்டு முடிகிறது. குண்டுமணி பேப்பருடன் ஓடிவந்து] குண்டுமணி: அம்மா அம்மா பாத்திங்களா ! குமுதா அம்மா விலாசத்தைக் கேட்டு உங்க தம்பி விளம்பரம் பண்ணி யிருக்காரு! பூமாலை: ஆ ) (பத்திரிகையைப் பார்த்தல்) குமுதாவைத் தேடு கிறான் பரந்தாமன்-பாவி ! அவளுக்கும் ஏதோ ஆபத்து வரப்போகிறது ! குண்டுமணி நான் உடனே மதறாஸ் புறப் பட வேண்டும். குண்டுமணி: சரிங்க ... பூமாலை: நான் போனால் தான் அந்த நாசகாரனிடமிருந்து குமு தாவைக் காப்பாற்ற முடியும் ! காட்சி 88] [ஹோட்டல் ரூம் [பரந்தாமன் அறையிலிருக்கும்போது ஹோட்டல் பையன் வந்து தந்தியைக் கொடுத்துவிட்டுப் போகிறான். பரந்தாமன் பிரித்துப் படிக்கிறான். ஆனந்தம். ஆபீஸ் பையன் உள்ளே வருகிறான்.) பரந்தாமன்: நம்ம குமுதா அட்ரஸ் கெடைச்சிட்டுது. தந்தி கொடுத்திருக்கிறாள். ம்ம்... குழந்தைக்கு வாங்கின பொம்மை, கிலு கிலுப்பை எல்லாத்தையும் எடுத்து வை. (பையன் போக) சீரழிந்த குடும்பத்திலே மறுமலர்ச்சி உண்டாக்குவேன். 7