பக்கம்:திரும்பிப்பார்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பாமா : இது என்னா வேலை... (சிரித்தபடி பரந்தாமன் கீழே வருதல்) பாமா: குடத்திலே விழுந்த சுருக்கு தவறி என் கழுத்திலே விழுந்தது, பரந்தாமன்: கழுத்திலேயுந்தான் சுருக்குப் போடப் போறேனே ........ பாமா: என்னாது...... பரந்தாமன் : பயப்படாதே ! இந்தக் கயிற்றால் அல்ல. உன் மரகதமணிக் கழுத்திலே மஞ்சள் தோய்ந்த மாங்கல்யக் கயிற்றால். (பாமா வெட்கம்) பாமா / சொன்னது சரி தானே ! அட சொல்லு...... (பாமா புன்னகை) ஆகா ! 1 புயலை அடக்கும் தென்றல், எரிமலையை அணைக்கின்ற பனிக் கட்டி, கேள்விப்பட்டதே இல்லை நான் !... ஆனால் அந்தப் புதுமையான சக்தியை உன்னுடைய ஒரு புன்னகையிலேயே காணமுடிகிறது. பாமா: இதெல்லாம் வெறும் வர்ணனையாகப் போய்விடாதே ? பரந்தாமன் : ஏன் சந்தேகம் !. (தோளில் கை வைத்து) நேற்று தானே அறிமுகமானான். இன்று தொட்டு விளையாடுகிறான், நாளை ஓடிவிடுவானோ என்று அஞ்சுகிறாயா ? கொஞ்சு மொழியாளே! கூர்ந்து கவனிக்கவில்லையா நீ, இல்லற ஜோதியிலே என்ன எழுதியிருக்கிறேனென்று. பாமா: எழுதியபடியே நடப்பீர்களா? பரந்தாமன்: (அலுத்தபடி) பெண்களே இப்படித்தான் சந் தேகப் பிராணிகள். பாமா : இல்லை...யில்லை... (அவன் முகத்தைத்திருப்பி) இங்கு பாருங்கள்... பரந்தாமன்: பாமா ! கண்ணே ! (நெருங்கல்) பாமா: ஊஹும்... எல்லாம் திருமணம் ஆனபிறகு...