பக்கம்:திரும்பிப்பார்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 கருடன்: பிணமா உலவினால்கூட உன்பெருமைக்கு ஆபத்து தான். பரந்தாமன்: முடிவு கட்டுகிறேன். இன்றைக்கே முடிவு கட்டு கிறேன். காட்சி 47] (மேஜையைத் திறந்து ரிவால்வாரை எடுக்கிறான்) (பூமாலை வீடு. மாடி-இரவு (பாண்டியன் குமுதா இருவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். பரந்தாமன் வந்து சுட்டு விட்டு ஓடிப்போகிறான். ஆனால் அவன் சுட்டது அங்குள்ள பெரிய கண்ணாடியை. பாண்டியன் குமுதா இருவரும் எழுந்து கட்டிக்கொள்கின்றனர் பயத்தால்.) [பரந்தாமன் மாடிப்படிகளில் இறங்கி கீழே ஓடுகிறான். சப்தம் கேட்டு, 'குமுதா, குமுதா' எனக் கதறி வரும் பூமாலை மாடிப்படியில் பரந்தாமனை சந்திக் கிறாள்.] பூமாலை: பரந்தாமன்! அடப்பாவி ! என்ன செய்தாய்! பரந்தாமன்: விடு. பரந்தாமனுக்கு இந்த உலகத்தில் பகைவர் களும் இருக்கக்கூடாது, பயன்படாதவர்களும் இருக்கக் கூடாது! (சொல்லிவிட்டு ஆத்திரமுடன் போய்விடுகிறான்) பூமாலை: குமுதா / குமுதா ! (என்று மேலே ஓடுகிறான்) [குமுதா அறை] பூமாலை: (அலறல்) குமுதா... குமுதா : சின்னம்மா... (தழுவுதல்) பாண்டியன் : என்னைக்கொல்ல முயற்சித்திருக்கிறார்கள் யாரோ. குமுதா: வேறு யார், எல்லாம் நம் வீட்டு விரோதிதான், சின்னம்மா ! இந்த வீட்டைவிட்டு நாங்கள் வெளியேற வேண்டும். அல்லது உன் தம்பி வெளியேற வேண்டும்.