பக்கம்:திரும்பிப்பார்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 பாண்டியன்: அழாதே குமுதா / மூன்று வருடங்கள் விரை வில் ஓடிவிடும். நான் திரும்பிவந்து உன்னை சந்திக்கும் போது உன் மடியிலிருந்து அப்பா என அழைக்கும் மழலைச் செல்வத்தை வாரி அணைத்துக்கொள்வேன். குமுதா (பதறி) பாண்டியன். பாண்டியன்.

( வார்டர்: புறப்படம்மா / டயம் ஆச்சு. (குமுதா பாண்டியனை விட்டு) குமுதா: பாண்டியன். பாண்டியன். பாண்டியன்: போய்வா குமுதா! (குமுதா போதல்)

காட்சி 60] [பூமாலை வீடு பூமாலை: (சோகமுடன் கண் கலங்க) கண்களை விற்று விட்டு சித்திரம் வாங்குகிற கதைக்கும் குமுதா பாண்டியன் வாழ் வைச் சீரழித்துவிட்டு சகோதர வாஞ்சையைக் காப்பாற் றிக் கொள்ளும் என் நிலைமைக்கும் என்ன வித்தியாசம்.... பரந்தாமன் : கண்களை விற்கும்படி யார் சொன்னது! என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டுப் போவதுதானே ! பூமாலை : அது என் குற்றந்தான். அதற்கு தண்டனையே உல கத்தில் கிடையாது! பரந்தாமன்: பாண்டியன் என்னை எதிர்த்து மேடை அதிரப் பேசலாம். கோடை மழைபோல் வசைச் சொற்களைக் கொட்டலாம். போலித் தலைவன் என புத்தகம் போட்டு பொதுஜன விரோதியாக்கலாம். இப்படியெல்லாம் உன் தம்பிக்குத் தகாத பெயர் - இழி தன்மை கற்பிக்கலாம். அதற்கு நான் சரியான பாடம் கற்பிப்பது மாத்திரம் பாபம் பாதகச் செயல். நன்றாயிருக்கிறதக்கா நியாயம். - பூமாலை: கொள்கை விரோதத்திற்காக, குடும்பத்தைக் கெடுப் பதுதான் நியாயம். இல்லையா ! பரந்தாமன்: ஆமாம்! அதற்கென்ன செய்யப் போகிறாய்...