பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 கண்டவர்கள் அல்லரோ அந்த இளங்குழந்தைகளோடு பழகும் நான் என் முந்திய கல்லூரி நாட்களைக் காட்டிலும் மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறேன் என்பது உண்மையாகும். குழந்தைகள் வகுப்பில் சேர்ந்த பிள்ளைகள் படிப்படி யாகப் பயின்று, பத்து அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு வரையில் பயில்வர். அவர்கள் வளரவளர அவர்தம் கல்வியும் அறிவும் செயல் திறனும் கூடவே வளர்ந்து வருதலைக் காண்பதும் நலம் பயப்பதாகும். தம்மில் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது’ என வள்ளுவர் உயிர்கள் அனைத்தின் பேரிலும் ஏற்றிச் சொல்லும் பண்பு நினைக்கத் தக்கது. 'தம் மக்கள்' என்ற தொடருக்கு எம் வள்ளியம்மாள் குழந்தைகள்' என்ற பொருள் அமைய, அந்த அடிப்படையில் இக்குழந்தைகள் படிப்படியாக முன்னேறும் திறன் கண்டு எங்களை நாங்கள் மறக்கிறோம். இத்தகைய நல்ல பிள்ளைகளுக்குள்ளே சில நஞ்சுத் துளிகளும் எப்படியோ கலந்து விடுகின்றன என்பதை எண்ணும்போது சற்றே வருத்தம் உண்டாகின்றது இயல்பு தானே. ஆம்! சில நேரங்களில் அத்தகைய பிள்ளைகளை நேரிய வழியில் கொண்டுவர பெருமுயற்சி செய்ய வேண்டி யுள்ளது. சில வேளைகளில் குழந்தைகளின் பெற்றோர் களே அச் சிறு பிள்ளைகளின் செயல்களை மறைக்கப் பார்த்து அவர்களைக் கெடுக்கின்றனர். சிறுபிள்ளைகள் பக்க த் தில் உள்ள பிள்ளைகளின் எழுதுகோல் முதலியவற்றை எடுத்து வைத்துக் கொள்வது இயல்பு. அதை நாங்கள் அவ்வளவு பெரிதாக எண்ணுவதில்லை. மேலும் அத்தகைய பிள்ளைகளை அழைத்துத் திருத்தினால் திருந்திவிடுகிறார் கள். ஆனால் அவர்கள் சற்றே பெரிய குற்றங்களைச் செய்யும்போது பெற்றோர்களையும் அழைத்துவந்து உடன் வைத்து விசாரித்தால், பெற்றோர்களே அப்பிள்ளைகள் குற்றம் செய்யவில்லை என வாதிடுவர். மேலும் சிறு குழந்தைகள் அக் குற்றங்களை ஒப்புக்கொண்டு மன்னிப்புக்