பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* ġġ கேட்கும் வேளையில் பெற்றோர்கள் பேசுவது அக் குழந்தை களுக்கே வியப்பூட்டுவதாக அமையும். சில சமயம் பெற்றோர்கள் இளங் குழந்தைகளுக்குக் காதில் பொன் நகைகளைப் பூட்டி அனுப்புவர். நாங்கள் அவையெல்லாம் போட்டுக்கொண்டு வரக்கூடாது என்று திட்டமாகக் கூறி, விதிகளையும் அச்சிட்டுக் கொடுத்த போதிலும் சிலர் அவற்றை மதிப்பதில்லை. நகையோடு வரும் சில பிள்ளை களை அழைத்துவரும் வேலைக்காரிகளும் அவர்களோடு: சேர்ந்த பிறரும் அக் குழந்தைகளின் நகைகளை மிட்டாய் முதலியன கொடுத்து ஏமாற்றிப் பறித்துக்கொண்டு சென்று விடுவர். பின்னர் பெற்றோர் எங்களிடம் சண்டைக்கு வருவர். நாங்கள் அவர்களை வன்மையாகக் கண்டித்து அனுப்புவதுண்டு. சில வளர்ந்த பிள்ளைகள் செய்யும் செயல்களையும் இங்கே நினைத்துப் பார்க்கத் தோன்றுகின்றது. வகுப்பு களுக்கு முறையான உடையோடு வரவேண்டுமென்று திட்ட மாக வற்புறுத்தினாலும் சிலர் கிழிந்த காலணிகளையும் வண்ணமாற்ற உடைகளையும் அணிந்து வருவார்கள். உண்மையிலேயே காசு பணம் செலவழித்து வாங்க முடியாத குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளானால் ஒரளவு இரண்டு நாள் கெடு தந்து மாற்றவோ புதுப்பிக்கவோ ஏற்பாடு செய்வோம். ஆயினும் எல்லா வசதிகளும் இருந்தும் வேண்டு மென்றே என்ன செய்து விடுவார்கள்?' என்ற நினைப் பில் ஒருசில பெற்றோர்கள் அவ்வாறு பள்ளிக்கு அனுப்புவ துண்டு. சிலர் நேரிலும் வந்து இன்னும் ஒருமாதந்தானே இருக்கிறது, வேறு வாங்கவேண்டுமா என்று வாதிடும் நிலையும் உண்டு. அத்தகைய முறைதவறி நடப்பவர்களுக் கெல்லாம் ஆண்டின் இறுதியில் மாற்றுச் சான்றிதழை ஆண்டுத் தேர்வின் முடிவுடனேயே நாங்கள் அனுப்பி விடுவோம். பிள்ளை வெறும் ஏட்டுப்படிப்புக்காக மட்டும் பள்ளிக்கு வரவில்லை. ஒழுக்கம், மற்றவருடன் பழகும் முறை, பிறபண்பாடுகளும் கூட்டுவாழ்வும் பயிலவே பள்ளிக்கு