பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i06 வருகின்றனர். இந்த அடிப்படையின்றி மாண வர் பயின்றுதான் என்ன பயன்? இதனாலேயே பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பல்வேறு கலவரங்கள் நாட்டில் நடப்பதைக் காண்கிறோம். எனவேதான் நாங்கள் வெறும் படிப்பிற் காக மட்டுமன்றி இந்த எல்லா அடிப்படைகளுமே அமைந் துள்ள நல்ல பண்புடன் கல்வியும் உடைய சிறந்த மாணவர் களுக்கே ஆண்டுதோறும் அவ் வகுப்புகளுக்குரிய பரிசுகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். பிள்ளைகள் சிலரைப் பெற்றோர்களே கெடுக்கின்றனர். ஒரு உதாரணத்தை மேலே காட்டினேன். அப்படியே பலப்பல. இரண்டொன்றினை இங்கே காட்டுகிறேன். பள்ளிக்கு எந்தப் பிள்ளையிடமும் காசு கொடுத்து அனுப்பக் கூடாது என்பது விதி. ஆயினும் சில பெற்றோர் காசுகள் மட்டுமன்றி பத்து ரூபாய்நோட்டு வரையிலும் அதற்கு மேலும் கொடுத்தனுப்புகின்றனர். அவற்றைக் கொண்டு பிள்ளைகள் வெளியில் சென்று கண்டதை வாங்கித் தின்று வயிற்றைக் கெடுத்துக்கொள்ளுகின்றனர். மேலும் வேறுசில பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு போய்க் கெடுக்கின்ற னர். இதனால் நாங்கள் பிள்ளைகள் ஒரு முறை உள்ளே வந்தால் மறுபடியும் வெளியே அனுப்புவதில்லை. உள்ளே பிள்ளைகளுக்குத் தேவையான குறிப்பேடு, எழுதுகோல், துடைப்பான் (Rubber) போன்றவற்றுடன் மிட்டாய்கள் பிஸ்கட்டு, சிற்றுண்டிகள் ஆகியவற்றையும் தர ஏற்பாடு செய் இன்றோம். சில ஆண் பிள்ளைகள் வாயிலில் உள்ள காவல் காரரிடம் லஞ்சம் கொடுத்து வெளியே செல்லவும் முயல்வர். அது எப்படியும் எங்களுக்குத் தெரிந்துவிடும். எங்கள் பணியாளர்கள் அந்த லஞ்ச ஊழலில் தலையிட மாட்டார்கள்: அவ்வாறிருந்த இரண்டொருவரையும் உடன் வெளியே அனுப்பிவிட்டோம்; இனியும் அனுப்பத் தவற மாட்டோம். மேலும் இவ்வாறு மிகச் சிலர்-விரல் விட்டு எண்னக் கூடிய சிலர் செய்வதால் உண்மையிலே காசு கொண்டு வராத-கொண்டு வர இயலாத சில பிள்ளைகளும் விதிக்குக் கட்டுப்பட்டு நடக்கும் பிள்ளைகளும் வருந்துவர்.