பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101 எனவே இந்த நிலை வளரக்கூடாது எனப் பெற்றோர்களைப் பலமுறை கேட்டுக் கொண்டிருக்கிறோம். எனினும் அவ்வப் போது-சில சில தவறுகள் நேரும்போது வருத்தத்தோடு கண்டிக்கிறோம். ஒருசமயம் ஒரு பிள்ளை ஐம்பது ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து இரண்டு மூன்று பேரை உடன் கூட்டிக் கொண்டு கண்டபடியே செலவு செய்து ஒரு சில ரூபாய்களைப் பிள்ளையார் உண்டியில் போட்டதை அறிந்தோம். உடனே அவன் பெற்றோரை வரவழைத்து விசாரித்தால், தாங்களே கொடுத்தனுப்பியதாகச் சொல்லி, அவனை மறைக்க முயன்றார்கள். ஆண்டின் இறுதியில் அவன் பள்ளியிலிருந்து நீக்கப் பெற்றான். (பெற்றோரோ பிள்ளைகளோ பெருந்தவறு செய்வார்களாயின் அவர்களை உடனே பள்ளியிலிருந்து நீக்க விதி இருப்பினும் நாங்கள் அவ்வாறு செய்வதில்லை. அப் பிள்ளையின் கல்வி இடையில் தட்ைப்படக் கூடாது என்ற கருத்தில், ஆண்டு முழுவதும் படிக்கச் செய்து தேர்வு எழுதிய பிறகே தேர்வு முடிவுடன் அவர்களை அனுப்பிவைப்போம்) ஒருமுறை மற்றோரு பையன் பதினைந்து ரூபாயினைக் கொண்டுவந்து உடன் சில பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பள்ளிக்கூடம் வ்ருமுன்பே விளையாடிவிட்டான். அவன் தந்தையார் ஒர் உயர் உத்தியோகம் வகிப்பவர். எனினும் அவன் அவ்வாறு செய்ய மாட்டான் என எங்களிடம் வாதிட்டார். பிறகு எல்லா வற்றையும் தக்க வழியில் விளக்கிய பின்பு செய்வதறியாது மன்னிப்பு கேட்டுக்கொண்டு வெளியேறினார். ஒரு பையனு டைய தாயார் தன் மகன் என்ன செய்தாலும் கேட்காது, இவ்வாறு கையில் கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு வந்து விடுகிறான் என்று முறையீட்டு அழுதார்கள். நாங்கள் அந்த அம்மையாருக்கு ஆறுதல் சொல்லி, அமைதிப்படுத்தி அனுப்பி அவனையும் திருத்த முயன்று ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளோம். இப்படியே சில பிள்ளைகள் வேறு சில பொருள்களை-மற்றவர்தம் கடிகாரம் போன்றவற்றைத்