பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 திருட அவற்றைக் கண்டுபிடித்து ஒப்படைக்கும் காவல் துறை வேலையினையும் எங்கள் ஆசிரியர்கள் செய்வதுண்டு. இன்னும் சில பிள்ளைகள் சம்பளம் கட்டாமலேய்ே கட்டி விட்டோம் என்று வாதிப்பர். அவர்கள் பெற்றோர்களும் அவர்களுடன் கூடிப் பேசுவர். நல்லவேளை வங்கியே சம்பளம் வசூல் செய்வதால், உரிய இரசீது கேட்டால் தடுமாறிப்பின் செல்வார்கள். ஒரு பையனுடைய பெற்றோர் கட்டியதாகச் சாதித்து, இரசிதும் காட்டாது தொலைந்து விட்டது என்று பொய்சொல்லி, வாதாடி கடைசியில் பாங்குக் கணக்கும் எங்கள் கணக்கும் காட்டி விளக்கிய பின் வாய்மூடி மெளனியாகச் சென்றனர். இப்படியே ஒவ்வொரு வகையில் பாலில் சிறு விடம் கலந்தது போன்று ஆங்காங்கே ஒரு சில பிள்ளைகள் இருந்தாலும் நாங்கள் அவற்றை களைந்து, கலந்து எல்லாப் பாலையும் கெடுப்பதற்குமுன், திருத்திச் செம்மைப்படுத்தும் நிலையில் ஒரளவு ஒழுக்கத் தினையும் ஒழுங்கினையும் நிலைநாட்டி வருகின்றோம். வளர்ந்த பெண்களும் எங்கள் பள்ளியில் பயில்கின்றன அன்றோ! அவர்களை கண்ணினைக் காக்கின்ற கருத்தோடு நாங்கள் காக்க வேண்டியுள்ளது. கூடுமானவரையில் மேல் வகுப்புகளில் பெரிய பிள்ளைகளை நாங்கள் புதிதாகச் சேர்ப்பது இல்லை. புதிய பதினோரம் வகுப்பு தொடங்கிய முதலில் சில பிள்ளைகளை அவ்வகுப்பில் சேர்த்தோம். அவர்களுள் ஒரிருவராலும் இங்கேயே பயின்று கட்டுப் பாடற்ற ஒரிருவராலும் சிறிதளவு நாங்கள் எங்கள் கட்டுக் காப்பை அதிகரிக்க வேண்டியிருந்தது. சிலசமயம் அவர்கள் பெற்றோர்களை அழைத்து விளக்குவோம். சில பெற்றோர் கள் உண்மை அறிந்து அவர்களே தம் பிள்ளைகளைக் கண்டிப்பர். ஒரு வயது வந்த பிள்ளையை அவர்தம் தந்தையார் எங்கள் முன்பே அடித்த அடியினைக் கண்டு நாங்களே தேற்றி அவர்களை அனுப்பி வைக்கவேண்டிய நின்ல உண்டாயிற்று. இந்த சிறு குறையெல்லாம் நாங்கள் பதினோறாம் வகுப்பு தொடங்கி அந்த ஓராண்டில்-நாம்