பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 மேலே கூறிய காரணத்தால் நேர்ந்தவையே. அதற்கு முன்போ பின்போ இத்தகைய குறைபாடுகள் ஒன்றும் இன்றி நாங்கள் வாழ்ந்து வருகிறோம். இந்தச் சிறு தவறுகளும் அவரவர் பெற்றோர்கள் சற்று கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டிருப்பார்களாயின் நேர்ந்திருக்க வழியில்லை. வேறு வகையிலும் சில வளர்ந்த பெண்களால் சில தொந்தரவுகள் நிகழும். சில ஆண்டுகளுக்குமுன் ஒரு பிள்ளை ஒழுங்காகப் பள்ளிக்கு வராததுடன் பள்ளி வேலைகளைச் சரிவரச் செய்யாது சரியாகவும் நடந்து கொள்ளாமையால் தலைமை ஆசிரியர் சற்று வன்மையாகக் கண்டித்தார். அப் பெண்ணைத் தேடிக்கொண்டு புதுப்புது முறை கொண்டாடிக் கொண்டு, இரண்டொரு ஆண் பிள்ளைகள் பள்ளிக்கு வருவதும், பள்ளி வாயிலில், நிற்பதும் அப் பிள்ளையின் வருங்கால வாழ்விற்குக் களங்கமாகும் என்று எண்ணிய முதல்வர் அவரைச் சற்று வன்மையாகவே கண்டித்திருப்பார். எங்கள் பள்ளியின் கண்டிப்பும் கட்டுப் பாடும் யாவரும் அறிந்தனவே. ஆயினும் அந்தப் பெண் நடந்து கொண்டது சற்றே எங்களுக்கு விசித்திரமாகப் பட்டது. ஒரு நாள் பகல் இரண்டு மணி அளவில் என் வீட்டுத் தொலைபேசி மணி அடித்தது. நான் எடுத்துப் பார்த்த போது பெண் குரல் கேட்டது. என்ன வேண்டும் என்றேன். என்னிடம் பலவகையில் மாற்றுக் குரலுடன் பேசி, மறுநாள் பள்ளிக்கூடம் விடுமுறை விடவேண்டும் என்று ஆணைப் பிறந்தது. நான் காரணம் கேட்டேன். "நாங்கள் அனைவரும் பிக்னிக் செல்லப் போகிறோம். அதற்காக லிவ்' என்று சொல்லி மேலும் முதல்வரைக் குறைகூற நான் தொலைபேசியை வைத்துவிட்டேன். அப்படியே மற்றொரு நாள் அவர்தம் நெருக்கமான சில ஆண் பிள்ளைகளை வீட்டுத் தொலைபேசியில் பேச வைக்க அதையும் உணர்ந்து கொண்டேன், அவ்வாறு பேசிய, பேசத்துண்டிய பெண் யாரென்று எனக்கு நன்கு தெரியும். எனினும் நன்றாகக் குரல், முறை முதலியவற்றை அறிய அடுத்த சில நாட்களில், அப்பெண்ணோடு பள்ளியில்