பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 பாடங்கள் பற்றிச் சில கேள்விகள் கேட்டு, பதிலாகிய அவர் பேச்சினால் உறுதி செய்துகொண்டேன். எனினும் நாங்கள் அப் பெண்மீது யாதொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக அப்பெண்ணின் மேல் இரக்கம்தான் பிறந்தது. "Boy friend", "Girl friend' srcir pr si i prag glásта 55 i பெருவழக்காய் இருப்பதெனச் சிலர் கூறினாலும் நம் பள்ளிப் பிள்ளைகள் அந்தத் தவறான வழியில் செல்லக் கூடாதே என்ற காரணத்தால் உளம் நைந்தது. என்னை நேர்முகமாக எவ்வாறு வசைபாடினாலும் நான் பொறுத்துக் கொள்வேன். என்னைத் திருத்த என் அன்னையில்லா நிலையில் நான் தவறும் போதோ, தவறினேன் எனத் தவறாகச் சிலர் நினைக்கும்போதோ, அவர்கள் ஏசுவது இயற்கை: நல்லது என்றுகூடச் சிலசமயங்களில் நினைப்பேன். ஆனால் மறைமுகமாக ஆங்கிலத்தில் "Black mail' என்று சொல்லும்வகையில் ஆள் மாறாட்டமாக நின்று பேச வேண்டாதவற்றை - பேசத் தகாதவற்றை அதிலும், ஒரு பெண்-படிக்கும் பெண்-பேசுவது என்பதைத்தான் என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனினும் அந்தப் பெண்மீது நாங்கள் யாதொரு நடவடிக்கையும் எடுக்கு முன்பே தன் நெஞ்சே தன்னைச்சுட தானாகவே அவர் கள் பள்ளியை விட்டுவிட்டார்களென எண்ணுகிறேன். இத் தகைய நிகழ்ச்சி எந்தப் பிள்ளையாலும் மறுபடி என்றும் தொடரவில்லை. அவர்கள் பெயர், செயல் அனைத்தையும் அன்றே மறந்தேன். முதல்வரும் அந்நிகழ்ச்சியினை முற்றும் மறந்தார். இவ்வாறு தூய வெள்ளைச் சுவற்றில் அங்கொன்று இங்கொன்றாகக் கரும்புள்ளி உண்டாக்கும் ஒருசில பிள்ளை களைத் தவிர்த்து, ஆயிரக்கணகான பிள்ளைகள் முறை தவறாது, ஒழுங்கினைக் கடைபிடித்து, உண்மையாகப் பயின்றும், பழகியும், பண்பாட்டின் வழிநின்றும் நம் பள்ளி யின் பெருமையை நிலைநாட்டுவது எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தருகின்றது. அப்படியே அப்பிள்ளைகளை