பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியர்களும் நாமும் 1968-ல் தொடக்க நாளில் செனாய்நகர் ஐயாவு தெரு வில் மூன்று பிள்ளைகளுக்கு ஐந்து ஆசிரியர்கள் நியமித்துப் பள்ளிக்கூடம் தொடங்கினோம் என மேலே குறிப்பிட்டேன். அவருள் ஒருவர் தலைவர்; இன்றைய முதல்வர் திருமதி சண்பகம் அவர்கள். மற்றவரில் ஒருவர் ஆடவர். ஆசிரியப் பணியில் பலகாலம் இருந்து ஓய்வு பெற்றவர். அவருக்கும் அன்றைய செகண்டரி ஆசிரியர் சம்பள விகிதத்தில் இருநூற்று எழுபது (ரூ. 270/-) சம்பளம் தந்தோம். (மற்றவர்களுக்கும் அப்படியே. தலைமை ஆசிரியருக்குச் சற்றே அதிகம்) அந்த ஆடவர் முன்னரே பணி செய்த அரசாங்க ஊழியராதலில் ஒய்வு ஊதியமும் பெற்றிருந்தார். மேலும் எங்கள் பள்ளியில் ஒரு ஆசிரியருக்கு ஒரு மாணவர் என்ற நிலை கூட இல்லாமல் இருந்த காரணத்தாலும் தம் சம்பளத்தில் நூற்று ஐம்பது எடுத்துக் கொண்டு, மிகுதியைப் பள்ளிக்கே நன்கொடையாகத் தந்துவந்தார். அப்போது மாணவர்களிடமும் 10 அல்லது 12 என்ற அளவில் குறை வாகவே கட்டணம் வசூலித்தோம். திங்கள் தோறும் முதல் தேதி தவறாது சம்பளம்கொடுக்கும் முறையினைத் தொடக்க நாளிலிருந்தே பின் பற்றி வருகிறோம் (இன்றும் அப்படியே). எனவே முதல் நாள் ஆசிரியர்களுக்கு தருவதற்குப் போதிய வருமானம் இருக்காது. அப்போது நான் பச்சையப்பனில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தேன். சம்பளம் சுமார் எண்ணுாறு அளவில் இருக்கும். முதல்தேதி பிற்பகல் அப்பெரி யவர் கல்லூரிக்கு வருவார். அவரிடம் என் சம்பளத்தை அப்படியே கொடுத்து, பிள்ளைகளிடம் வசூலான தொகை யினையும் சேர்த்து எப்படியோ சரிகட்டித் தவறாது சம்பளம் தந்து வந்தோம். இந்த இக்கட்டான நிலையினைக் கண்ட தாலும் அவர்தம் சம்பளத்தில் நன்கொடை தந்தாரோ என