பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 எண்ண வேண்டியுள்ளது. அவர் இரண்டு ஆண்டுகள் ஆசிரியராக இருந்தார். பின் மறுவாண்டு மாணவர் எண்ணிக்கை சற்றே உயர்ந்த போதிலும் (46) அந்த ஆண்டும் அவ்வாறே நன்கொடை அளித்துவந்தார். ஆனால் அதே வேளையில் அப்போது பணியாற்றிய மற்றொரு ஆசிரியை, பெற்றோரிடத்திலும் பிற இடங்" லும் கடன்கள் வாங்கி அனைவரையும் ஏமாற்றிச் சென்ற நிலையினையும் நினைக்க வேண்டியுள்ளது. பெற்றோருள் ஒருவர் அவர் பேச்சைக் கேட்டு, தானும் ஓர் பள்ளியை ஆரம்பித்தால் நிரம்பப் பிள்ளைகள் சேரும் என்று நம்பி, அதற்கு ஏற்பாடு செய்து அந்த ஆசிரியையைத் தலைமை ஆசிரியராக அமர்த்த முடிவு செய்து, அந்த ஏற்பாட்டில் அவருக்குச் சுமார் ஆயிரம்ருபாய் அளித்திருந்ததாகப் பிறகு 'அறிந்தோம். ஆசிரியரிடம் நிரம்பக் குறைகள் கண்டபோது இரண்டாம் ஆண்டின் இறுதியில் அவர்களை நீக்கிய பிறகு தான், அந்தத் தந்தையார் தாம் பெரும் தொகை அவரிடம் தந்ததையும் அது திரும்பி வரா நிலையினையும் கூறி எங்களை வழி சொல்லுமாறு கேட்டார். நாங்கள் சொல்ல என்ன இருக்கிறது? பின் உடன் இருந்த ஆசிரியர்கள் வழியே அவர் வேறு பள்ளி தொடங்க ஏற்பாடு செய்திருந்ததையும் அதனாலேயே அவர் அத் தொகையினைக் கொடுத்தார் என்பதையும் அறிய முடிந்தது. 1970-ல் அண்ணா நகர் 178 எண்ணில் என் சொந்த மனையில் கட்டடம் கட்டத் தொடங்கி கீழ்த்தளத்தினை முடித்து குழந்தைகள் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை யில் தொடங்கியபோது அதிகமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டி இருந்தது. அவ்வப்போது விளம்பரங்கள் கொடுப் போம். பல விண்ணப்பங்கள் குவியும். ேத ைவ யான வகையில் வரையறுத்த எண்ணிக்கையில் நேர் முகத் தேர்வுக்கு வரச் சொல்வோம். அவர்களுக்குக் சாதாரண வகையில் அவர்கள் பயின்ற பாடத்தில் கட்டுரை கள் எழுதச் சொல்வோம். அவர்களைப் பற்றிய முழுத்