பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 தகவல்களைத் தருமாறு குறிப்பு எழுதச் சொல்லுவோம். பலர் பெருந் தவறுகள் செய்வார்கள். ஆங்கிலத்தில் உயர் பட்டம் (M.A.) பெற்றவர்கள்கூட ஓரிரண்டு வாக்கியங்கள் ஆங்கிலத்தில் எழுத இடர்ப்பட்டமை கண்டு, அவர்களிடம் பிள்ளைகளை ஒப்படைத்தால் வருங்காலச் சமுதாயம் என்னாவது என்று வருந்திய நாட்கள் உண்டு. ஒரு சிலர் நல்ல முறையில் தத்தம் பொருள் பற்றி விளக்கம் காட்டி, எழுதியதையும் ஈண்டு சுட்டக் கடமைப்பட்டிருக்கிறோம். எந்தக் காலத்திலும் நாங்கள் சிபாரிசு பேரில் ஆசிரியர் களைத் தேர்ந்தெடுப்பதோ மாணவர்களைச் சேர்ப்பதோ கிடையாது. அப்படியும் சிலர் எங்கிருந்தாவது சிபாரிசு கடிதங்களைக் கொண்டு வருவர்; சிலர் நேரே சிலரை அழைத்து வந்துவிடுவர், நாங்கள் உங்கள் சிபாரிசினைக் காட்டிலும் அவர்கள் தகுதியினையே போற்றுவோம்' என்று கூறி, உண்மையிலேயே அவர்கள் தகுதியுற்றவராக இருப்பின் தேர்ந்தெடுப்போம்; இல்லையெனில் வாய்ப் பில்லை என்று சொல்லி விடுவோம். தொடக்கத்தில் எங்கள் பள்ளி எந்த அரசாங்கக் கல்விக் குழுவோடும் இணைக்கப் பெறவில்லை என்பதும் 1974-ல் தான் மத்தியக் கல்விக்குழுவோடு இணைக்கப் பெற்றது என்பதும் முன்னரே கூறப்பட்டன. எனவே அதற்கு முன்பு வரையறுக்கப் பெற்ற திட்டமிட்ட சம்பள அமைப்பு இன்றேனும் நாங்கள் கூடியவரை தமிழக அரசு அமைக்கும் திட்ட அடிப்படையிலேயே சம்பளம் தந்துவந்தோம். எனினும் இது அங்கீகரிக்கப் பெறாத ஒன்றானமை யாலும் அரசாங்கப் பள்ளிகளிலோ அரசாங்க உதவி பெறும் (Aids) பள்ளிகளிலோ பணியாற்றினால் ஓய்வு, ஒய்வு ஊதியம், வேறு பல சலுகைகள் கிடைக்கும் என்ற காரணத்தாலும் பலர் எங்கள் பள்ளியினை மட்டு மன்றி, இதுபோன்ற பள்ளிகள் அனைத்திலுமிருந்தும் அடிக்கடி வெளியே சென்று அத்தகைய அரசாங்க மானியம் பெறும் பள்ளிகளில் சேர்ந்துவிடுவர். எனவுே