பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 நாங்கள் சில சட்டதிட்டங்களை ஏற்பாடு செய்யவேண்டிய நிலை உண்டாயிற்று. குறைந்தது பணிஏற்ற, அந்த ஒரு ஆண்டிலேயாயினும் இடையில் விட்டுவிடாது தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று உறுதி மொழியினைப் பெற்றே ஆசிரியர்களுக்கு பணி உத்தரவு வழங்குவோம். மேலும் அரசாங்க விதிமுறைகளை ஒழுங்காக மேற்கொள்ள வேண்டும் எனவும் வற்புறுத்துவோம். ஆயினும் அரசாங்க விதிமுறையில் தற்காலிகப் பணியாற்றுபவர் இரண்டு மாத ஊதியமும் நிலைத்த பணியாளர் மூன்று மாத ஊதியமும் தந்து எப்போது வேண்டுமானாலும் விலகலாம் என்ற நிலை இருந்ததால் சில ஆசிரியர்கள் இடையிடையே இந்த வகை யில் விட்டுச் செல்ல வாய்ப்பு இருந்தது. இதனால் எங்கள் பிள்ளைகள்-சில வகுப்புகள்-இடையிடையே மாற்று ஆசிரியர்களிடம் பயில வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த நிலை இன்னும் நீடிக்கின்றது. எங்கள் பள்ளிகள் தனித்த முறையில் மானியமின்றி இருப்பதால் வேலை வாய்ப்பு நிறுவனத்தின் வழியேதான் எங்கள் தேவைக்கு, வேண்டியவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நியதி இல்லை. அதுவும் இருந்திருக்குமாயின் இடையிடையே பல நாட்கள் பலபல வகுப்புகள் ஆசிரியர்கள் இல்லாமலே, இருக்க நேரிட்டிருக்கும். - மேல் வகுப்பு வரவர, எங்களுக்கு முதுகலை பயின் பயிற்சி பெற்ற (M.A., M.Sc.) ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய நிலை உண்டாயிற்று. அவ்ர்களுள் பெரும் பாலோர் கல்லூரியில் இடம் பிடிக்க நினைப்பவராதலாலும் மேலே காட்டியபடி அரசாங்கம் பள்ளிகளிலே நிறையச் சலுகைகள் இருந்தமையாலும் அவர்களும் நிலைத்து நிற்க வழியில்லை. தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம் போன்ற வற்றைப் பயின்றவர்கள் அதிகமாக உள்ளனர். எனினும் பிற பாடங்களுக்குப் போதியவர் இல்லையாதலால் அவர் கள் அடிக்கடி உயரிடம் கிடைப்பின் இதை விட்டுச் சென்று. விடுவர். இதனினும் வேடிக்கையான ஒன்று, பெளதிகத்தில் (Physics) sтih. எஸ்.சி. பட்டம் - பெற்றவர் பாங்கிகளில்