பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ii) எழுத்தர் உத்தியோகத்திற்குச் செல்வதாகும். இதற்கு அவர்கள் தங்கள் பணத்தையும் அரசாங்கப் பணத்தையும் ஆயிரக்கணக்கில் செலவிட்டு, நாட்டுக்கு உதவாத நிலை யிலே எதையோ படித்து எங்கோ எப்படியோ பணியாற்றும் நிலையில் செல்வானேன்? இந்தக் குறைபாட்டை அரசாங்கம் நீக்கக் கடமைப்பட்டுள்ளது. (இதுபற்றி எனது மற்றொரு நூலில்-புதிய கல்வி முறை +2 விளக்கமாக எழுதி யுள்ளேன்). இப்படியே பலவகைகளில் நிலைத்த ஆசிரியர் கள் கிடைக்காத குறை இன்னும் தொடர்ந்து உள்ளது. இந் நிலை இது போன்ற பள்ளிகள் அனைத்திற்கும் பொது வானதே. அரசாங்கப் பள்ளிகளிலும் அரசாங்க உதவி பெறும் பள்ளிகளும் இந்த நிலை இல்லாமல் இல்லை. ஆண்டு முழுவ துக்கும் அறிவியல் பாடம் சொல்லித்தரும் உயர்ப்பட்டம் பெற்றவர் இல்லையாதலால் வேறும் நிலையிலோ அல்லது பி. எஸ்.சி. போன்ற பட்டங்கள் பெற்றவரைக் கொண்டு பாடம் நடத்தும் நிலையிலோ பள்ளிகள் உள்ளதைப் பலரும் அறிவர். சில பள்ளிகளில் அறுபதும் எழுபதும் எண்பதும் என மாணவர்களை அடைத்து, ஒரே ஆசிரியரின் கீழ்ப் பயில வைப்பது எனக் கேள்விப்படுவதும் உண்டு. எங்கள் பள்ளி, யில் அந்த விதமான நிலையில்லை. 35 அல்லது 40 என்னும் அளவில் பிள்ளைகளை அமைத்து அதற்கு ஒர் ஆசிரியர் என்ற விதியினை ஏற்படுத்திச் செயல் பெற்று வருகின்றோம். மேலும் ஒய்வு ஊதியம் பிற சலுகைகளும் இல்லாத நிலை யினைப் போக்க, 1975-லிருந்து உயிர் ஒப்பந்த நிதியினை இங்கே செயலாக்கியுள்ளோம். ஆசிரியர்கள் அவரவர் சம்பளத்திற்கேற்ப 3,000 முதல் ஒப்பந்தம் கொள்ள அதற்குரிய கட்டணத்தில் மூன்றில் ஒரு பகுதியினை (சம்பள அடிப்படையில்) பள்ளியேகட்டி மிகுதியினை ஆசிரியர்கள் கட்ட வேண்டுமென்ற முறையினை ஏற்படுத்தியுள்ளோம். மகப்பேறுக்கான விடுமுறை போன்றவற்றையும் நிலைத்த ஆசிரியர்களுக்கென அளித்து வருகின்றோம். மேலும் விடுமுறை (Casual leave) எடுக்காத ஆசிரியர்களுக்கு அந்த