பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111. எடாத நாட்களுக்கு ஏற்ற வகையில் சம்பளத்தை ஆண்டு. விழாவின்போது தந்து பாராட்டுகிறோம். கடந்த சில ஆண்டுகளாக (1982 முதல்) மத்திய சேமிப்பு நிதியில் ஆசிரியர்களை உறுப்பினராக்கி, அவர்களை நூற்றுக்கு ஆறுவீதம் கட்டச் செய்து நாங்கள் 7.22 வீதம் கட்டி, ஒய்வுக்குப்பின் நிலைத்த வருமானத்துக்கு ஏற்பாடு செய் திருக்கிறோம். இதில் ஒரளவு உயிர்ப் பாதுக்காப்புத் திட்டமும் அடங்கியுள்ளது. மற்றும் பத்து வருடம் ஆனவர் களுக்கு போனஸ்' போன்று ஆயிரம் முதல் பத்தாயிரம் வரையில் (அவரவர் சம்பள அடிப்படையில்) தந்து விடுகிறோம். ஆனால் அத்தகைய தொகை பெற்றவர்களுள் ஒரிருவர் வெளியில் பத்து ரூபாய் மாத சம்பளம் கூட்டித் தந்தால் உடனே ஆண்டு நடுவில் இப் பள்ளியினை விட்டு, கொம்பு விட்டுக் கொம்பு தாவும் தன்மையினைப் போன்று செல்வதையும் வருத்தத்தோடு இங்கே குறிப்பிட வேண்டி யுள்ளது. - இந்த ஆண்டில், 1986க்கு முன்-சேர்ந்தவர்களுக்கெல் லாம்- முன் போனஸ் பெற்றவர்களாயிருந்தாலும், ஒரு பெருந்தொகை அளித்து, அதை வங்கியில் இட்டு ஏழு ஆண்டு களில் மும்மடங்காகப் பெருக வழி செய்துள்ளோம். இதனால் ஒன்பதுபேர் பயன் பெற்றுள்ளனர். மேற்கூறிய மத்திய சேமிப்பு நிதியில் (C. P.F.) ஐம்பதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துள்ளார். ஆசிரியர்கள் சேர்ந்து, இரண்டாண்டுகள் கழித்த பிறகே அவர்கள் இதில் சேர்வர். ஒரளவு அவர்தம் பணியும் உறுதி செய்யப்பெறும். இவ்வாறு பல சலுகைகள் அளித்த போதிலும், மேலே காட்டிய காரணங்களாலும் வேறு. பல காரணங்களாலும்: ஆண்டுதோறும் சில .. ஆசிரியர்கள் விலகுவதும் சிலர்: புதிதாகச் சேருவதும் வழக்கமாகியுள்ளது. ஆயினும் சில ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்றுகின்றனர். ஒருசிலர் மேற்கு ஆசிய நாடுகளில் தங்களுக்கோ தங்கள் கணவர் களுக்கோ உயர்ந்த உத்தியோகம் வந்தமையால் நம்