பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# I 12 பள்ளியை விட்டுச் சென்றுள்ளனர். அவர்களுள் ஒருவர் தவிர்த்து மற்றவர் அனைவரும் முறையாக ஆண்டு இறுதி வரையில் இருந்தோ அன்றி மூன்று மாத முன் அறிவிப்பின் படியோ சென்றுள்ளனர். ஒருவர் தம் கணவருடன் வடக்கே எங்கோ சேர வேண்டியிருந்தும், பிள்ளைகளின் நலம் கருதி யும் முறை கருதியும் மூன்றுமாத அறிவிப்பின்படியேஅதற்குள் அந்த ஆண்டுக்கு முடிக்க வேண்டிய பாடங்களை முடித்தே, விலகிச் சென்றனர். அத்தகைய நல்லவர் களெல்லாம் இன்றும் பள்ளி முதல்வருக்கு அடிக்கடி கடிதம் எழுதிப் பள்ளியின் நலத்தையும் முன்னேற்றத்தையும் கேட்டு அறிவதோடு, தற்போதும் தாங்கள் வள்ளியம்மாள் பள்ளியிலே பணி செய்வதாகக் கருதுவதாகவும் திரும்பி வரின் இங்கேயே சேருவதாகவும் குறிப்பிடுகின்றனர். இவ்வாறே விட்டுச்சென்ற ஆசிரியர்களுள் ஒரு சிலர் திரும்ப வும் பள்ளியில் சேர்ந்து இன்றும் பணியாற்றுகின்றனர். ஒரு சிலர் கணவர் தம் உத்தியோக மாற்றுதலால் பிரியமுடியா நிலையில் வருந்திப் பிரிகின்றனர். ஒருசிலர் மணமானபின் கணவரோடு கலந்து வாழ வெளியூர்களுக்குச் செல்லுகின்ற னர். இவர்களெல்லாம் பள்ளியில் வாழ்ந்த கால எண்ணங் களை மறக்காததோடு, இப் பள்ளியில் பெற்ற நல்ல அனுபவங்கள் அவர்களை வேறு இடங்களில் பணியாற்றும் போது எவ்வெவ்வாறு உயர்த்தி விளக்கி உள்ளன என்பதை எழுதியுள்ளார்கள். எடுத்துக்காட்டுக்கென அண்மையில் வந்துள்ள கடிதத்தினை இங்கே இணைத்துள்ளேன்." இவ்வாறு My dear Madam, Long five years have passed by. But still you are a sparkling star in my, mind. Hope my wishes will cheer you to enter into a prosperous New year. My humble regards to Founder Sir. Affly MARY DUBAI 5, 12. 86.