பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 13 வள்ளியம்மாள் குடும்பத்தில் பழகும் ஆசிரியர்கள் உவப்பத் தலை கூடி உள்ளம் பிரியும் நிலையில் பணியாற்றுவதையும் அவர்கள் ஆர்வத்தையும் பார்வையிட்ட பல பெரியவர்கள் தங்கள் குறிப்பில் சுட்டிக் காட்டியுள்ளனர். (பின் இணைப்பு) இவ்வாறு நலம் நிறைந்த பண்பாளர்கள் ஒருபுறம் இருக்க, மற்றொரு புறத்தினையும் இங்கே எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது, தொடக்க நாளிலேயே ஒராசிரியர் செய்ததை முன்னரே குறிப்பிட்டேன். ஒருசிலர் நேர்முகத் தேர்விற்கு வந்து, அவர்களைத் தேர்ந்தெடுத்த பின், உத்தரவும் பெற்றுக்கொண்டு, பணியில் சேராது திடீரென நின்றுவிடுவர். இத்தனைக்கும் நாங்கள் அவர்களது ஒப்பந்தத்தினைப் பெற்று வைத்திருந்தும், நாங்கள் சேர வில்லை, சேர்ந்த பிறகுதானே ஒப்ப்ந்தம்' என்று வாதிடுவர். நீங்கள் பள்ளிக்கூடம் திறக்கும் நாளில் வருவீர்கள் என்ற நம்பிக்கையிலேதானே பாட நூல்களை உங்களிடம் தந்து, வகுப்புகளுக்கு உரிய பாட அட்டவணை முதலியவற்றையும் தயாரித்தோம் என்று சொன்னாலும் அவர்களுக்கு ஏற்ப தில்லை. சிலர் மட்டமாகக்கூடப் பேசுவர். சிலர் முறை யென ஒத்துக் கொண்டு தாங்கள் முன்னேற வேறு வங்கி யிலோ அன்றி அரசுத் துறையிலோ பணி பெற்றமையைச் சுட்டி விடுதலை வேண்டுவர். எப்படிச் சென்றாலும் இழப்பு எங்கள் பள்ளிக் குழந்தைகளுக்குத்தானே. அதிலும் தேர்விற்குச் செல்லும் வகுப்புகளுக்கு மட்டும் பாடம் எடுப்பவராயின் வேதனை இரட்டிப்பாகும். இந்த ஆண்டில் இவ்வாறு சில ஆசிரியர்கள் சென்றதை நினைக்க வேதனை மேலும் மேலும் அதிகமாகிறது. ஒருசிலர் தெரிந்த அமைச்சர்கள் அல்லது சட்டமன்ற உறுப்பினரிடமிருந்தோ அல்லது உயர் அதிகாரிகளிட மிருந்தோ கடிதம் பெற்றுவருவர். ஒருவர் போலீஸ் போன்ற அதிகாரிகளைக் கொண்டு மிரட்டுவர். இவ்வாறு பலவகை யில் எங்களுக்குத் தொல்லை கொடுத்த ஆசிரியர் சிலர் என் தி. தி.-8