பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'I 14 கண்முன் நின்றனர். அவர்கள் சென்ற இடத்தும் செம்மை யாக இல்லாது அமைந்து நிற்பதையும் சிலர் உதைப்பந்து உருளுவது போல் அங்கும் இங்கும் உருளுவதையும்கூடக் கண்டு வருந்த வேண்டியுள்ளது. அதே சமயத்தில் தன்னைப் பற்றி மட்டும் நினைக்கும் இந்த தகைமையாளர்கள் கையி லிருந்து நல்ல பிள்ளைகள் வருங்காலச் சந்ததிகள் எங்கள் இளங் குழந்தைகள் விடுபட்டதை எண்ணி மகிழ்ச்சியும் பிறக்கின்றது. நாட்டில் கல்வித்தரம் குறைந்து வருவதாகவும் மாணவர் களிடம் ஒழுக்கிமின்மையும் கட்டுப்பாடற்ற நிலையும் அதிகமாகி வருவதாகவும், பல கல்விக் கூடங்கள் கால வரம்பின்றி மூடிக்கிடப்பதாகவும் அறிகிறோம். இவற்றிற் கெல்லாம் காரணம் மாணவர்கள் அல்லர் என்பதையும் 'அரசியல் இடையீடும் பல ஆசிரியர்தம் பொறுப்பற்ற நிலை யும் என்பதைப் பல நல்லவர் நாட்டில் அறிந்து எழுதி யுள்ளனர். (6.4-82-The Hindu) இதில் உண்மை இல்லாமலும் இல்லை. பிள்ளைகளின் முன்பு வாழ்ந்து காட்ட வேண்டிய் ஆசிரியர்களே வழுக்கி விழுவார்களாயின் பிள்ளைகள் என்னாவது? பிள்ளைகள் காலம் தாழ்த்துவரின் கடுமை யாகத் தண்டிக்கும் நிலையில் ஆசிரியர்களே காலம் தாழ்த்து வந்து உரிய காலத்தில் வந்ததாகப் பொய்யான கையொப்பமிடும் கயமை'யினை எண்ண நடுக்கமுண்டா கின்றது. எங்கள் பள்ளியிலேயே அவ்வாறு சில ஆசிரியைகள் செய்யும்போது நான் அவர்களை அழைத்து வன்மையாகக் கண்டிப்பதுண்டு. அ ப் படி யே வகுப்புகளில் பாடம் நடத்தாது பிள்ளைகளை ஆடவிட்டுவிட்டு, வேறு கதைப் புத்தகங்ளையோ, அன்றித் தாங்கள் மேல் படிப்புக்கு உரிய பாடங்களையோ படித்துக் கொண்டிருப்பர். அன்றி அடுத்த வகுப்பிற்குச் சென்று, அந்த ஆசிரியரையும் பாடம் நடத்தவிடாது அவர்களோடு பேசிக் கொண்டிருப்பதும் உண்டு. இவ்வாறு ஆசிரியர்கள் இருந்தால் பிள்ளைகள் படிப்பது எங்கே முன்னேறுவது எங்கே! அப்படியே சில