பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 ஆசிரியர்கள் மாணவர்கள் குறிப்ப்ேடுகளைத் திருத்துவது இல்லை. சிலருக்குத் திருத்தவும் தெரியாது. வாக்கிய அமைப்பு-வார்த்தை-சொல் அமைப்பு முதலிய அறியாது அலமரும் ஆசிரியர்களும் உண்டு. நாங்கள் அவற்றைக் கண்டு கண்டிப்பதோடு, அவர்கள் வகுப்புகளையும் பாடங்களையும் மாற்றி அமைப்பதுண்டு. ஒரு சில ஆசிரியர்கள் எங்கள் பள்ளி யில் வேலை அதிகமாக இருப்பதாகவும் அதனால் இதை விட்டுச் செல்வதாகவும் கூறி விலகுவர். நாங்களும் தடை சொல்லுவதில்லை. - . அரசாங்கமோ அதன் அடிப்படையில் அமைந்த மேலதிகாரிகளோ ஆசிரியர்தம் நன்மையில் கருத்திருத்துவது மகிழ்ச்சிக்குரியது. ஆனால் அதே வேளையில் அவர்கள் கடமைகளிலிருந்து வழுவி, பல பிள்ளைகளின் வருங்காலத் தினைப் பாழ் செய்யும் நிலையில் அவர்களைத் தக்கவாறு தண்டிக்க வேண்டாமா? கல்விக் கூடங்களில் கோடிக்கணக் காக உள்ள வருங்கால இளைஞர்களுக்காக இருப்பதன்றி, ஒருசில ஆசிரியர்களுக்கென இல்லையே. இதைச் சிலர் ஒத்துக் கொள்ளுவதில்லை. ஆசிரியனாக என் ஆயுள் முழுவதும் கழித்த நான், இன்று ஆசிரியர் சமூகம் செல்லும் நிலையினை எண்ணிப் பார்க்கிறேன். நான் துறைத் தலைவனாகவும் கல்லூரியின் துணை முதல்வனாகவும் இருந்த காலத்திலும் மிகவும் வன்மையாக இருந்து, மற்ற வரிடம் வேலை வாங்கினேன் என்று குறைபட்டுக் கொள் பவர் உண்டு. ஆனால் அதே ஆசிரியர்கள் நான் கல்லூரியை விட்ட பிறகு ஐயா. தாங்கள் இல்லாத குறையினை இப்போது உணர்ந்து தடுமாறுகிறோம்' என்று வந்து கூறிச் செல்வர். எனவே ஆசிரியர்தம் கட்டுப்பாடும் கடமை உணர்வும் செம்மையாக அமையுமானால் வருங்காலத் தமிழகம்-பாரதம் சிறக்க முன்னேற்றம் அடையாதா? இந்த அடிப்படையிலே தான் எங்கள் பள்ளி தொடக்க நாளில் இருந்து இயங்கி வருகிறது. அதனாலேயே பல கட்டுத் திட்டங்களுக்கு ஆசிரியர்களும் மாணவர்களும் உட்படவேண்டியுள்ளது.