பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 இந்த நிலையின் ஆயுள் முழுவதும் ஆசிரியனாக இருந்த நான் வாழ்ந்த நாளை எண்ணிப்பார்க்கிறேன். நான் புலவர் பட்டம் பெற்றதும் காஞ்சியில் உயர் பள்ளியில் பொறுப் பேற்று எட்டு ஆண்டுகள் பணிபுரிந்தேன். பின் என் ஆசிரியர் ஒருவரே எனக்கு அடுத்து, கீழ்வகுப்புகளுடன் நிற்க, அவருக்குத் துணையாக வந்த புதிய தலைமை ஆசிரியருடன் நின்று, என் பொதுமக்கள் தொடர்பு, செல்வாக்கு பிற சிறப் பியல்புகள் கண்டு, என்னை விலக்க நினைக்க நானே விலகினேன். பின் முப்பத்திரண்டு ஆண்டுகள் பச்சையப்பரில் பணி செய்து ஒய்வு பெற்றேன். மலேயா, ஆப்பிரிக்கா, இலண்டன் போன்ற இடங்களிலிருந்து பெருந் தொகை வருவதாக அழைப்புவந்தும் நான் செல்லவில்லை. அரசாங் கமும் பல்கலைக் கழகமும் அனுப்பவே இரண்டாண்டுகள் விடுப்பில் வெளியே சென்று திரும்பிவந்தேன். இந்த நிலைத்த பணியே என்னை மனநிறைவொடு வாழச் செய்கிறது. கடந்த பதினெட்டு ஆண்டுகளில் நாங்கள் அனுப்பிய ஆசிரியர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களாகவே இருப்பர். சிலரை நாங்கள் அனுப்ப விரும்பும் நிலையில் அவர்களாகவே விலகிக் கொள்வதாகச் சொல்வர்: நாங்களும் மகிழ்ச்சியோடு வழி அனுப்புவோம். யாருக்கும் மூன்றுமாதம் அல்லது இரண்டுமாதச் சம்பள மோ முன்னறிவிப்போ கொடுத்து நாங்கள் அனுப்பவில்லை. எனினும் ஆண்டுதோறும் விலகிச் செல்வது நடைபெறும் நிகழ்ச்சியாக உள்ளது. ஆசிரியர் பயிற்சித் தகுதி அற்றவர் எனக் கண்டபோதும் கூடியவரையில் அவர்தம் பாடங்கள், வகுப்புகள் முதலியவற்றை மாற்றி, அந்த ஆண்டு முழுவது மாயினும் அவர்களை வைத்திருந்தே நாங்கள் அனுப்பு வோம். ஆயினும் சில ஆசிரியர்கள் செய்வதை நினைத் தால்தான்...? வெளியில் அரசாங்கத்திலோ அரசாங்க மானியம் பெறும் பள்ளியிலோ உத்தியோகம் கிடைத்தால், சிலர் சம்பளம் வாங்கியதும் சொல்லாமல் நின்றுவிடுவதுண்டு.