பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 அதன் கொடுமையினையும் விளையும் பயனையும் எண்ணியே பிறகு அவர்தம் தேர்வுச் சான்றிதழ்களையும் பிறவற்றையும் வாங்கி வைத்துக் கொண்டபிறகு நியமனம் செய்வது வழக்கமாயிற்று. ஆயினும் ஒருசிலர், விட்டுவிட்டு பிறகு யாரையாவது சிபாரிசு பிடித்து வாங்கிக் கொள்ளலாம் என்று சென்றுவிடுவதுண்டு. ஆனால் எப்படியும் அவர்கள் முறைப்படி, இரண்டு அல்லது மூன்று திங்கள் ஊதியத்தினைத் தந்தாலன்றி அவற்றை நாங்கள் தருவதில்லை. ஒருசிலர் வெளிப்படையாகவே தாங்கள் செல்ல இருப்பதைக் கூறி, பணமும் கட்டி விடுதலை பெற்றுச் செல்வர். தனிமனிதர் உயர்வை மட்டும் கருதி, வருங்காலச் சமுதாய உயர்வை நினைத்துப் பார்க்காத இந்த அரசாங்கச் சட்டத்துக்கு நாங்கள் உட்படாதிருக்க முடியவில்லை. அதனாலேயே சமுதாயம் நாளுக்கு நாள் நலிவுற்று வருகின்றது. மாணவர் நிலை மங்கி வருகிறது. - ஒருசில ஆசிரியர்கள் கற்பனைக்கு எட்டாத வகையில் பொய்யினைச் சொல்லவும் தயங்குவதில்லை, ஒரு சிலரை நாங்கள் முழுக்க முழுக்க நம்புவோம். அவர்களோ பெரும் பாலும் பெரும் பொய்களைச் சொல்லி வஞ்சகம் செய்வர். 1981-82-ல் அவ்வாறு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியினை எண்ண உளம் வேகின்றது. மூன்று ஆண்டுகளுக்கு முன் ஆங்கில்மே பேசத் தெரியாத ஒருவரை, திருத்த முடியும் என்ற நம்பிக்கையில் ஆசிரியராக்கி, ஒரளவு திருத்தவும் செய்து நல்லவகையில் அவர்களை முன்னுக்குக் கொண்டு வந்தோம். அவர்களும் எப்போதும் இங்கேயே இருப்பதாக வாக்களித்தனர். எனினும் வெளியில் அவர்களுக்கு ஒரு வேலை கிடைத்தவுடன் அவர்கள் செய்த செயல்தான் எங்கள் நெஞ்சை வாட்டுகின்றது. இதுவரையில் யாரும் செய்யாத செயலைச் செய்தார்கள். ஒருநாள் திடீரென உறவினர் ஒருவருடன் வந்து, தனக்குத் திடீரென ஊரில் திருமணம் கூடிவிட்டதாகவும் இரண்டே நாளில் ஊரில் நடக்க ஏற்பாடு ஆகிவிட்டதெனவும் பத்திரிகை சுடப்