பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 போட நேரமில்லை எனவும் எனவே இரண்டு மாதம் சம்பளம் வாங்கிக்கொண்டு, சர்டிபிகேட்டுகளைக் கொடுத் தால் உடன் புறப்பட ஏதுவாகும் என்றும் அழாத குறையாகக் கேட்டார்கள். நாங்கள் உண்மையிலேயே திருமணம் என்ற காரணத்தால் மகிழ்ந்தோம். ஒரு சிறிதளவும் ஐயம்கொள்ள வில்லை, எங்களிடமும் எங்கள் பள்ளி முதல்வரிடமும் அதிகமான சலுகை பெற்றவர் அவர். பிற ஆசிரியர்களும்பாவம் உண்மையென்று நம்பி, தம் உடன் உழைத்தவர் திருமணம் என அறிந்து ஒரு எவர்சில்வர் பாத்திரத்தை அப்போதே வாங்கி வந்து பரிசளித்தனர். நாங்களும் ஒருமாத சம்பளத்தைத் திரும்பிக் கொடுத்து திருமணத்திற்கு நல்ல புடைவையாக உடனடியாக வாங்கிக் கொள்ளுங்கள் என வாழ்த்தி அனுப்பினோம். ஆனால் அவர்கள் மறுநாளே நகரில் உள்ள வேறொரு பள்ளியில் சேர்ந்து பணிபுரிய ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு மணமும் இல்லை-ஒன்றும் இல்லை. இதை அறிந்த அனைவர் உள்ளங்களும் எப்படி ஏமாற்றப்பட்டோம் என்று நைந்து வாடின, அவர்கள் வாழ்வு செம்மையுறுமா? இது ஒரு எடுத்துக்காட்டு. இந்தக் கொடும் எல்லையில் இன்றேனும் வேறு சில வழிகளைக் கைப்பற்றி இடையிடையே நின்ற ஆசிரியர்களும் சிலர். ஆசிரியர்களுள் சிலர் பிள்ளைகளிடம் சற்றே கடினமாக நடந்து கொள்வதும் உண்டு. அவற்றையும். அவ்வப்போது கவனித்துத் திருத்தவேண்டிய பொறுப்பும் முதல்வரையே சேரும். நல்லவேளை பிள்ளைகளுக்கு இரகசியமாக மார்க்கு அளிப்பதும் அதற்கென கையூட்டு வாங்குவதும் போன்ற இழி செயல்களை இங்கே யாரும் செய்வதில்லை: செய்ய வாய்ப்பும் இல்லை. கடந்த பதினெட்டு ஆண்டுகளில், அவ்வாறு முயன்ற ஒரிரு ஆசிரியர்களை அந்த ஆண்டே விடை கொடுத்து அனுப்பிவிட்டோம். , 'துரக்கின் பெரியது மேன்மேல் எழச் செல்லச் செல்ல வலியதன்றோ தாழும் துலைக்கு என்பது ஆன்றோர்