பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 வாக்கு. ஆனால் சிலர் சற்றே அதிகம்.படித்துவிட்டால் கீழ் வகுப்புகளுக்கு பாடம் எடுக்க மறுப்பர். 'முந்திரி மேல் காணி மிகினும் கீழ் தன்னை இந்திரனாப் போற்றி விடும்' என்ற வள்ளுவர் வாக்குத்தான் எனக்கு நினைவுக்குவரும், பாடம் நடத்த முடியாவிட்டாலும், வராத ஆசிரியருக்கு மாற்றாக இருந்து, பிள்ளைகளுக்கு பொதுவான அறிவுரைகளைச் சொல்லுங்கள் என்றாலும் அதற்கும் சுணங்குவர். எனினும் நாங்கள் யாருக்கும் தனிச் சலுகை கொடுப்பது. இல்லையாதலால், எப்படியும் இட்ட பணியினை செய்யப் பணித்து விடுவோம். ஆசிரியர்களைப் பற்றி நினைக்கும்போது எத்தனையோ நல்ல நினைவுகளும் சில மாறுபட்ட நினைவுகளும் உள்ளத் தில் நிழலாடுகின்றன. இங்கே இந்த அளவில் போதும் என அமைகின்றேன். பெரும்பாலான ஆசிரியர்களின் ஒத்துழைப் பினாலும் உடனிருந்து உதவும் மனப்பான்மையாலும் கடமை உணர்ந்து செயலாற்றும் தன்மையாலும் நம் பள்ளி வளர்பிறை என வளர்ந்து வருகின்றது என்பதை நன்கு உணர்வோம்-நாடு,அறியும். பள்ளியின் முதுகெலும்பான இந்த நல்லாசிரியர்களைப் போற்றி அவர் க ைள ப் பாராட்டக் கடமைப் பட்டிருக்கின்றேன். உடலில் அங் கங்கே தோன்றும் புண்களை மருந்திட்டு ஆற்றுவது போல் வேண்டாதவர்களை விருந்தோ மருந்தோ இட்டுப் புறம் போக்கி, தியாக உணர்வோடு செயலாற்றும் நல்லாசிரியர் கள்தம் கூட்டுறவாலும் உடன் உழைப்பினாலும் வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து மேன்மேலும் பள்ளி பலவகை யில் உயர்ந்தோங்கும் என்பது உறுதி. அத்தகைய நல்லாசி ரியர்தம் வாழ்வும் வளமும் சிறக்க என வாழ்த்துகின்றேன்.