பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121 பள்ளியினைத் தங்களுடையதாகவே கருதித் தாமாகவே வலியவந்து வேண்டிய உதவிகளைச் செய்துள்ள பெற்றோர் பலர். அதே வேளையில் எங்களுக்கு மாறாகச் செயல்பட்ட ஒருசில பெற்றோர்களும் உளர். அண்ணாநகரில் பள்ளி வளர்ந்தபிறகு எதிர்பாராது சேரவரும் பெரும் எண்ணிக்கை உடைய மாணவரில் தேர்வு அடிப்படையில் ஒரு சிலரையே எடுக்க நேர்வதால் இடம் கிடைக்காத பலர் எங்களை வெறுக்கச் செய்தனர். பள்ளி வைத்ததால் எனக்கு விரோதிகள் அதிகமானார்கள் என்று நான் என் நண்பர் களிடம் சொல்வதுண்டு. குழந்தை வகுப்பாகிய 'L.K.G."-ல் ஜூன் மாதத்தில் நாங்கள் 90 (அல்லது) 100 மாணவர் களுக்கு மேல் சேர்ப்பதில்லை. வகுப்பிற்கு முப்பதாக மூன்று பிரிவுகள் பிரித்து அந்த இளஞ் செல்வங்களை நல்ல முறையில் பாதுகாத்து வருகின்றோம். அதனால் அந்த எண்ணுக்கு மேற்பட்டு வரும் குழந்தைகளை எங்களால் சேர்க்க முடிவதில்லை. (தற்போது 100.க்கு மேல் போவ தால் நான்கு பிரிவுகளாகத் தனியாக மழலையர் கோட்டத் தில் அவ்வகுப்புகளை. L.K.G.U.K.G. நடத்தி வருகிறோம். அதனால் சில பெற்றோர்கள் எங்களை வசைபாடுகிறார் சள். சில பெற்றோர் தம் குழந்தைகள் மேல் வகுப்புகளில் படித்துக் கொண்டிருக்கும். அவர் தம் தம்பி தங்கையர் வரின் தாராளமாக இடம் கொடுப்போம். ஆனால் அவர் கள் காலம் கடந்து வருவார்களாயின் என்ன செய்ய முடியும்? நாங்கள் "I.K.G. வகுப்பிற்குச் சேர்ப்பதைப் பெரும்பாலும் ஏப்ரல் இறுதியிலேயே அந்தந்த ஆண்டில் முடிவு செய்துவிடுவோம். சிலர் ஜூன் இடையில் அல்லது இறுதியில் வந்து கேட்பர். என்ன செய்ய முடியும்? அப்படியே அவர்கள் மூத்தோர் பள்ளியில் பயில்வார்களா யின் எப்படியோ சரி செய்து இடம் கொடுக்க முயல்வோம். எனினும் இடம் பெறாதவர்கள் எங்களை மாற்றுக் கண்ணோடு நோக்குவதை ஆண்டுதோறும் உணர்ந்துதான் வருகிறோம். கூடுமானவரையில் ஒரு வகுப்பிற்கு மூன்று பிரிவு (5ஆவது வரையில்) என்றும் மேல் வகுப்பிற்கு இரு