பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 பிரிவு என்றும் திட்டமிட்டு அதற்கேற்ப அறைகளையும் பிறவற்றையும் அமைத்துச் செயலாற்றும்போது, அதிக மாகச் சேர்த்து, அதிக பிரிவுகளை எப்படி ஏற்படுத்த இயலும் என்பதைச் சிலர் உணருவதில்லை. சேர்ப்பதற். கென்று பெருந்தொகையினை வஞ்சித்துப் பெறும் வழக்க மும் எங்களிடம் இல்லை. மேல் வகுப்புகளுக்குப் பிள்ளைகளைத் தேர்ந்தெடுக்கும் பொழுது, தேர்வு முறையினைக் கையாண்டு, உள்ள இடத்துக்கு ஏற்ப முதல் நிற்கும் பிள்ளைகளை எடுத்துக் கொள்வோம். ஒரு வகுப்பில் நான்கு இடம் இருந்தால், சுமார் இருபது பிள்ளைகள் தேர்வு எழுதுவர். அதில் முதல் நால்வரை நாங்கள் முறையாகத் தேர்ந்தெடுப்போம். மற்றவரை என் செய்வது? பதினைந்தாவது இடத்தில் உள்ள ஒருவர் எப்படியாவது இடம் பெற முயல்வர். இதற் காக அமைச்சர்கள் உதவியை நாடினவர்கள் உளர். அவர் களும் பரிந்துரைப்பர். எனினும் நான் தயங்காது நேரில் சென்று தேர்ந்தெடுப்பதில் கையாளும் முறையினையும் சேர்க்க அமைந்த விதிகளையும் விளக்கும்போது, அவர்கள் உணர்ந்து நாங்கள் செய்வது சரி என்றும் வேண்டுமானால் கீழ்வகுப்பில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்றும் சொல்லுவார் கள். அவ்வாறு பரிந்துரைக்கப் பெற்றவர்கள் மட்டுமன்றி, தேர்வு எழுதிய வகுப்பிற்குத் தகுதி இல்லாதவரை, இடமிருந்தால் கீழ் வகுப்பில் சேர்த்துக் கொள்ளும் முறை யினையும் நாங்கள் தொடக்கம் முதலே மேற் கொண்டிருக் கிறோம். ஒருசிலர் ஐநூறு அல்லது ஆயிரம் ரூபாய் தருகிறோம். எப்படியாவது அந்த வகுப்பிலேயே சேர்த்துக் கொள்ளுங்கள் என்று யாராவது ஒருவரை சிபாரிசு கொண்டு வருவார்கள். எங்களை நன்கு அறிந்தவர்கள் அதைச் சொன்னால் கீழ் வகுப்பில் இடம் கிடைக்காததோடு, என்றும் பள்ளியில் சேர்க்க மாட்டார்கள் என்று சொல்லித் திருப்பி அனுப்பி விடுவார். அறியாதவர் வந்து சொல்லி, இடம் இல்லை