பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 என்ற பதிலைப் பெற்று எங்களைக் கோபப் பார்வையோடு பார்த்துச் செல்வர். ஒருசிலர் பல பள்ளிகளில் அரசாங்க மானியம் பெறும் பள்ளிகளில் கூட ரூபாய் கொடுத்தால், தொகைக்கு ஏற்ப வகுப்பிலும் இடம் கிடைப்பதால் இங்கேயும் அப்படி இருக்குமோ எனக் கேட்டோம் என வருத்தம் தெரிவித்துச் செல்வார்கள். நாங்கள் அறிவிப்பில் குறிப்பிட்ட தொகையினைத் தவிர அதிகம் வாங்குவது என்றும் வழக்கமில்லை என்று திட்டவட்டமாக அறிவித்து விடுவோம். எனினும் இடையில் சில ஆண்டுகளில் ஒருசிலர் இடம் கிடைக்காத காரணத்தால் நாங்கள் சேர்ப்பதற்குப் பெருந்தொகை கணக்கில் காட்டாமல் வாங்குகிறோம் என்று புரளியைக் கிளப்பிவிட்டனர். இரண்டு முன்று ஆண்டுகளாக அத்தகைய புரட்டு அடங்கிவிட்டது என அறிகிறோம். சில ஆண்டுகளுக்கு முன் என்னுடன் பச்சையப்பரில் பணியாற்றிய ஆசிரியர் ஒருவர் தம் மகளைச் சேர்க்க வந்தபோது தனியாக என்னிடம் வந்து 'ஐயா, தங்கள் அறிக்கையில் குறித்ததோடு மேலும் எவ்வளவு கொண்டு வரவேண்டும், என்று கேட்டார். நான் சிரித்துக் கொண்டே', 'அப்படி ஒன்றும் தேவையில்லை என்றேன். அவர் "ஆம், அதை நான் அறிகிறேன். ஆயினும் சிலர் அவ்வாறு புரளி விடுகிறார்கள், எனவே கேட்டேன்’ என்றார். பிறகு உரிய தொகை கட்டியே அவர்-தம் மகளைச் சேர்த்தார். இப்படி ஒருபக்கம் நல்ல உணர்வோடு உற்றவராய் உதவும் பெற்றோர்கள் ஒருபுறமும் மற்றார் புறமும் இருக்க எங்கள் பள்ளிப் பணி தடைக்கற்களைக் கடந்து ஒங்குகிறது. எங்கள் பள்ளி நடுத்தர வகுப்பினருக்காகவும ஏழை எளியவர்களுக்காகவும் அமைந்த பள்ளியாகும். ஒருசில செல்வர் வீட்டுப் பிள்ளைகளும் உயர் அதிகாரிகள் வீட்டுப் பிள்ளைகளும் பயில்கின்றார்கள். ஆயினும் நாங்கள் எந்தவித வேறுபாடும் காட்டுவதில்லை. நான்காம் துறை உத்தியோகத்தர்' எனப்பெறும் அலுவலக உழியர்கள்.