பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 பால்காரர், பூ விற்பவர், செருப்புத் தைப்பவர் போன்ற பலரும் எங்கள் பெற்றோராயுள்ளனர். ஒருசில வியாபாரி கள், ஆங்கிலம் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் ஆகியோரும் உள்ளனர். தொடக்கத்தில் ஒரு சிறுவன் எங்கள் பள்ளியில் பயின்றான். அவன் தந்தையார் ஓர் தனியார் அலுவலகத் தில் கடைநிலை' ஊதியராகப் பணியாற்றினார். அவருக்குச் சம்பளம் பத்தாம் தேதிதான் வரும். நாங்கள் சம்பளம் கட்டுவதற்குக் கடைசி நாள் அப் பத்தாம் தேதி எனவும் மறுநாள் (அக்காலத்தில்) ஐம்பது பைசா தண்டம் எனவும் அமைத்திருந்தோம். அந்த அரை ரூபாய் கட்டமுடியாத நிலையில், அவர் பத்தாம் நாள் இரவு 7 அல்லது 8மணி அளவில்-சிலநாள் உறங்கிய பின் பத்துமணி அளவில் தட்டி எழுப்பி அந்தச் சம்பளத்தை என்னிடம் கொடுத்துக் செல்வார் (அப்போது பத்து அல்லது பன்னிரண்டு ரூபாய் சம்பளம் என எண்ணுகிறேன்) நான் அவர்நிலை எண்ணி மறுநாள் காலை அப் பையன் பெயரிட்டு இரசீது எழுதி அவனிடம் கொடுத்தனுப்பிவிடுவேன். ஆனால் அதே வேளையில் உரிய காலத்திலும் கட்டாது, மறந்து விட்டதாகக் கூறிக்கொண்டு இருபதாம் தேதிக்கு மேல் யாதொரு தண்டமும் இல்லாது வாங்கிக் கொள்ள வேண்டும் என்று வாதிட்டு வற்புறுத்துவோரும் உண்டு. ஆயினும் அத்தகையோரெல்லாம் கடந்த நான்கைந்து ஆண்டுகளில் இல்லை என்பதையும் கூறிக் கொள்ளுகிறேன். ஒரு பெரியவர்-உயர்ந்த பதவியில் உள்ளவர் சம்பளம் காலம் கடந்து கட்டுவதற்கென வந்து பள்ளியின் முதல் வரைக் காணவிரும்பினார். அப்போது முதல்வர் ஆசிரியர் கள் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தமையால் காண முடியவில்லை என்று புற அலுவலர் சொன்னார்கள். பிறகு அவர் தண்டத்துடன் கட்டிச் சென்றார் என நினைக்கிறேன். ஒருசில மாதங்கள் கழித்து நான் ஏதோ ஒரு அலுவலாக ஒரு நண்பரைக் காணச் சென்றேன். அவர் இந்தப் பெற்றோர் வீட்டில் இருப்பதறிந்து அங்கே சென்றேன்.