பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 நண்பர் அங்கே இருந்தார். வீட்டவர் தன்னை நான் காண வந்ததாக எண்ணி அழைத்து உட்கார வைத்தார். உடனே தான் பள்ளிக்கு வந்தபோது முதல்வரைக் காணமுடியாது திரும்பி வந்ததைக் கூறி, அப்போது என்னையும் அவ்வாறே வெளியில் உள்ள பியூன் சொல்லி திருப்பி அனுப்பி இருக்கக் கூடும் என்றும் இதைச் சொல்லவே உள்ளே அழைத்த தாகவும் கூறினார். அது நல்ல தமிழ்ப்பண்பாடு; இந்தியப் பண்பாடு என நினைந்தேன். நான் அவரைக் காணவர வில்லை எனவும் அ ங் கு உடனிருந்த நண்பரைக் காண வந்தேன் எனவும் கூறினேன். அவர் முகம் மாறிவிட்டது. ஆயினும் விடாது 'பத்தாம்தேதி சம்பளம் கட்டவில்லையானால் மறுநாள் ஐந்துருபாய்கூட வாங்குவது எப்படிப் பொருந்தும்? ஒரு நாளைக்கு இருபத்தைந்து ரூபாய்க்கு ஐந்து ரூபாய் வட்டியா? ஐந்து ரூபாய் கட்டினால் தவறு சரியாகிவிடுமா? என்று கேட்டார். அவர் நீதித்துறை யில் பணியாற்றியவராகையால் ஒன்றைச் சுட்ட நினைத் தேன்! ஐயா கொலையாளிக்கு மரணதண்டனை விதிக்கிறார்களே! அதனால் மாண்டவன் திரும்பி விடுவானா? அதற்கு இது சரியாகுமா? அன்றி கொடுமை களுக்குத் தண்டமாக ஒரு தொகை விதிக்கிறார்களே? அதனால் தவறு சரியாகிவிடுமா? எனக்கேட்க நினைத்தேன். எனினும் அதுபண்பாடு ஆகாது என விட்டுவிட்டேன். நண்பரோடு பேச வேண்டியதைப் பேசிவிட்டுவந்து விட்டேன். இப்படியும் ஒருசிலர். பிள்ளைகள் எந்தெந்த வகையில் நடந்து கொள்ள வேண்டும் எனவும் மீறி நடப்பது முறையற்றது எனவும் விளக்கங்கள் காட்டி, மாணவர் குறிப்பேட்டில் (Hand book) அச்சிட்டு ஒவ்வ்ொருவருக்கும் தந்து வருகிறோம். அதைப் பெற்றோர் அனைவரும் தவறாது படிக்க வேண்டுமெனக் கேட்டு விண்ணப்பமும் செய்துள்ளோம். எ னி னு ம் சில பெற்றோர்கள் அவற்றைப் படிப்பதில்லையோ அன்றிப் படித்துச் செயலாக்க முடிவதில்லையோ அறியோம்.