பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 அதனால் சில தவறுகள் உண்டாகின்றன. உதாரணத்துக்கு ஒன்றிரண்டு சொல்ல நினைக்கிறேன். வி ைல யு ய ர் ந் த பொருள்களையும் நகைகளையும் அணிந்து கொண்டும் எடுத்துக் கொண்டும் வரக்கூடாது எனத் திட்டமாக அறிவித்திருக்கிறோம். எனினும் சில குழந்தைகள் நகைகளை அணிந்து வருகின்றனர். ஒரே வகையான சீருடையும், நகை முதலியன இல்லாமையும் பிறவும் குழந்தைகள் மனத்தில் வேறுபாடு உணர்ச்சி வளரா மைக்கு முதற்படியாக அமைய வேண்டும் என்பதே எங்கள் கருத்து. வெறும் புறத்தோற்றத்திற்கும் ஒரே வகைக் காட்சிக்கும் மட்டும் அமைந்தது சீருடையன்று. அகப் பொலிவை வளர்க்கவும் அது பயன்பட வேண்டும். பிள்ளை பருவத்தில் அந்த உணர்ச்சி வளருமானால் வருங்காலச் சமுதாயம் அனைவரும் விரும்பும்படியே சமதர்மச் சமுதாய மாக மலரும் என்பது எங்கள் உள்ளக்கிடக்கை. அப்படியே வளர்ச்சியடைந்த பெண்களின் நிலையைக் கட்டுபடுத்தி, இளங்குழந்தைகளென அவர்களைப் புறத்தே காட்டவும் இவ்வுடை பயன்படுவது. எனவே அகம் புறம் இரண்டும் தூய்மையாக நிலவச் செய்த ஏற்பாடே இது. ஆயினும் சில பெற்றோர்கள் நகைகளைத் தம் கு ழ ந் ைத களுக்கு இட்டு அனுப்புவதும் அவை காணாமற்போவதும் அதுபற்றி விசாரிப்பதே ஆசிரியர்களுக்கும் முதல்வருக்கும் பெரும் பணியாவதும் சில சமயங்களில் நிகழ்கின்ற நி க ழ் ச் சி க ள். அப்போதெல்லாம் பெரியவர்களைக் கூப்பிட்டுக் கேட்டால் தக்கபதில் சொல்வதில்லை. தாங்கள் குறிப்பேட்டினைப் படிப்பதில்லை எனவும் சொல்லுவர். எனினும் நாங்கள் நாள்தொறும் பிள்ளைகள் விட்டுச் செல்லும் பொருள்களை நன்கு பாதுகாத்து மறுநாள் வந்து கேட்பின் சிறு தண்டத்தொகை பெற்றுத் திருப்பித் தந்து விடுவோம். அந்தப் பொறுப்பினைத் தனியாக ஓர் ஆசிரியரிடமே ஒப்படைத்துள்ளோம். அப்படியும் சில பெற்றோர் தங்கள் குழந்தைகளைப் பற்றிக் கவலைப்படுவ