பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 தில்லை. நாங்கள் பருவம்தோறும் (Term) உள்ள பொருள் களை வெளியில் வைத்து உரியவர்களை வந்து எடுத்துச் செல்லச் சொல்வோம். இரண்டொருவர் எடுத்துச் செல்வர். பல அப்படியே இருக்கும். ஆண்டின் இறுதியில் அவற்றை ஏலத்திலோ மொத்தமாகவோ விற்றுவிடுவோம். பொது வாகச் சில பெற்றோர் விதிக்களுக்குக் கட்டுப்படாது பின்வந்து தூற்றுவதைப் பெருமையாகவும் கொள்ளு கின்றனர். இவ்வாறே உடை முதலியவற்றிலும் பெரும்பாலான பெற்றோர்கள், விதிமுறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள் என்றாலும் ஒருசிலர் சற்றே மாறுபடுகின்றனர். அவ்வாறு விதி முறைகளை மாறுபவரைத் தண்டிக்க வழி உண்டேனும் கூடியவரையில் தண்டனையைக் குறைக்கவே நினைக் கிறோம். எதற்கும் கட்டுப்படவில்லையானால், ஆண்டின் இறுதித்தேர்வுக்குப் பிறகு அந்தக் குழந்தை வெற்றி பெற்றாலும், இன்றேனும் அப்படியே மாற்றுச் சான்றதழை (Transfer Certificate) G3srajapuka Lór pigot'il? stiãissir தொடர்பை நிறுத்திக் கொள்வோம் என்பதை முன்னரே குறிப்பிட்டுள்ளேன். குழந்தைகள் தவறு செய்வது இயற்கை. அதைத் திருத்த வேண்டுவது பெரியோர் செயல். அறியாத்தனமாக சிறுகுழந்தைகள் அடுத்த குழந்தைகளின் எழுதுகோல், நூல் பிற பொருள்களை எடுத்துக் கொள்வதுண்டு. சில பிள்ளை கள் மற்றவர் கொண்டுவந்திருக்கும் உணவுப் பாத்திரங் களைத் திறந்து அவற்றை ருசி பார்ப்பதும் உண்டு. அத்தகைய வேளைகளில் ஆசிரியர்களே கண்டித்துத் திருத்துவர். சிலமுறை முதல்வர் அவர்களும் கண்டித்துத் திருத்துவர். ஆனால் அப்பிழைதிரும்பத்திரும்ப நடந்தாலோ அன்றி பெரும்பிழையாக நின்றாலோ பெற்றோருக்குத் தெரிவித்து அவர்களை வரச்சொல்லி, அவர்களிடமும் சொல்லிக் குழந்தைகளைத் திருத்த முயல்வார் முதல்வர். பல பெற்றோர்கள் அவ்வாறு அவர் அழைப்பை ஏற்று