பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 28 வந்து, குறைகேட்டுத் தத்தம் குழந்தைகளைத் திருத்த முயல்வர். ஓரிருவர் குழந்தைகள் செய்யும் குறைகளைக் கண்டதும் தாங்களே நேரில் அழைத்து வந்து முதல்வரைக் கண்டு, எப்படித் திருத்த தேண்டுமோ அந்த வகையில் ஆற்றுப்படுத்த, அறவுரைகேட்டுச் செல்வர். ஆயினும் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் தங்கள் குழந்தைகள் ஒரு தவறும் செய்யாதது போலவும் ஆசிரியரும் முதல்வரும் வேண்டுமென்றே குழந்தைமேல் குற்றம் சாட்டுவதாகவும் மற்றக் குழந்தைகளின் பெற்றோர்களிடம் அபாண்டமாகப் பேசுவது போலவும் வாதிடுவர். குழந்தைகளே தாம் செய்த தவறுகளை ஒத்துக் கொள்ளும்போதுகூட, அது பயத்தால் அப்படி ஒத்துக்கொள்ளுகிறது என்று சொல்லி தம் குழந்தை களைக் குற்றமற்றவர் எனச் சொல்லி வாதிடுவர். அவர் களுக்கு இரக்கப் படாமல் என் செய்ய முடியும்? குழந்தைகள் எதிரிலேயே அவர்கள் குற்றங்களை மறைத்துக் காக்கும் பெற்றோர்களின் கீழ் அவை எப்படி வளரும் என்று நான் சொல்ல வேண்டியதில்லை. அப்படியே அதை விட்டுவிடாமல் நாங்கள் அக்குழந்தைகளைத் திருத்த முயல்வோம். பெற்றோர் தலையீடும் இ ைட யீ டு ம் அதிகமாயின் ஆண்டின் இறுதியில் அக்குழந்தைகளை நல்ல முறையில் அனுப்பிவிடுவோம். ஒரு அன்னையார் எங்கள் முதல்வரிடத் தில் தம் குழந்தையின் உடைபற்றிப் பெரிய வாதிட்டார். சரியாக உடை அணிந்து வரவில்லையாதலால், வெளியில் நிறுத்தி, வீட்டுக்கு அனுப்பினர். உடனே அப் பிள்ளையின் தந்தையும் தாயும் வந்து அவ்வாறு அனுப்பியது தவறு என வாதிட்டனர். ஆனால் அதே அன்னையார் தன் மற்றொரு மகள் வேறொரு பள்ளியில் படிப்பதையும் அங்கே அவள் நாடொறும் உடை அணிந்து ஒழுங்காகச் செல்ல இரவு பகல் தூக்கமில்லாமல் உடைகளைச் செப்பம் செய்து தருவதையும் முதல்வரிடம் சில நாட்களுக்கு முன் பெருமையோடு சொன்னார்களாம். அந்த நிலையினைச் சுட்டி முதல்வர் காட்ட, இருவரும் தலைகுனிந்து மெளனி யாகித் திரும்பினர்.