பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 39 ஏழை எளியவர் மட்டுமன்றி சில செல்வர் வீட்டுக் குழந்தைகளும் தக்க உடையில் வருவதில்லை. வேறு எத்ெதெற்கோ ஆயிரக் கணக்கில் அள்ளி வழங்கும் பெற்றோர் குழந்தைகள் விஷயத்தில் கருத்திருந்துவதில்லை. கண்டித்தால் சண்டைக்கு வருவர். அத்தகையவர்கள் தொடர்பையும் ஆண்டு இறுதியில் அறுத்துவிட்டு, நல்ல பிள்ளைகளின் நலம் காப்போம். சிலர் தம் குழந்தைகளை நன்கு கவனித்து ஒழுங்காக உடையளித்து அனுப்பும்போது, ஒருசிலர் கிழிந்த அழுக்கடைந்த-முறையற்ற ஆடை, காலணிகளை இட்டு அனுப்புவர். ஆசிரியர்கள் க்ண்டித்து வீட்டிற்குத் திருப்பி அனுப்பினாலோ பெற்றோர்ட்வாதிட வந்து விடுவர். இவ்வாறு பல நல்லவர்களுக்கிடையே ஒருசில அல்லவர் இருப்பினும் அனைத்தும் பொறுமையோடு ஏற்று அன்னைப் பணியினை அட்டின்றிச் செய்து வருகின்றோம். சில பெற்றோர்களை எண்ணும்போது அவர்கள் பெருந் தன்மையினையும் தளரா உதவியினையும் நினைவு கூர்ந்து போற்ற வேண்டியுள்ளது. முன்னமே ஒரிருவரைக் குறித் துள்ளேன். திருவாளர் கண்ணன் அவர்கள்தம் மூன்று பிள்ளைகள் இங்கே பயில்கின்றனர். (இருவர் தேர்ச்சி பெற்று வெளியே சென்றுவிட்டனர்) அவர் தற்போது எங்கோ வேறு இடத்தில் பன்னியாற்றினாலும் அவர் குடும்பம் இங்கே உள்ளமையின் தொடர்ந்து இங்கேயே பயில்கின்றனர். நாங்கள் நாடகம் நடத்திய அந்த ஆண்டில் அவர் முயன்று தனிமையில் ஏறக்குறைய நாலாயிரத்துக்கு மேல் டிக்கெட் விற்று. நாடகம் நடப்பதற்கு முன்பே எங்களிடம் தந்தார். பின் 4648 B' நிலம் பற்றிய தகராறு உண்டான காலத்தில் அவர் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தார். அப்போது அரசாங்கத்துக்கும் வீட்டுவசதி வாரியத்துக்கும் எழுதிய கடிதங்களில் பலவற்றை வரைந்து தந்தார். மேலும் வாரிய அலுவலகத்துக்கும். அரசாங்க அலுவலகத்துக்கும் தி. தி.-9