பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盟3á பலமுறை என்னுடன் வந்து பலவகையில் எங்கள் உரிமை யினைக் காட்டித் தெருட்டினார். இன்றும் அவர் வெளியே இருந்தபோது-கல்கத்தா அல்லது அசாம் மாநிலத்தி லிருந்து அடிக்கடி கடிதத்தில் பள்ளியின் வளர்ச்சி பற்றிக் கேட்டுக் கொண்டே இருந்தார். அவர் வாழ்வு சிறக்க என வாழ்த்துகின்றேன். : அப்படியே பெற்றோர் ஆசிரியர் சங்கச் செயலாளராகத் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் பணியாற்றிய திருமதி சம்பா சீனிவாசன் அவர்களும் ஒய்வு பெற்ற போலீஸ் அதிகாரி திரு. பார்த்தசாரதி ஐயங்கார் அவர்களும் பள்ளி வளர்ச்சியில் பல்வேறு வகையில் கருத்திருத்தி, கடிதங்கள் எழுதியும் விழாக்களில் தவறாமல் கலந்துகொண்டும் வேறு பலவகையிலும் உதவி செய்துள்ளனர். நான் முன்னரே குறித்தபடி, திரு. இராசசேகரன் என்னும் மற்றொரு பெற்றோர் எங்கள் நாடகம் நடத்த உடன் துணையாகவும் இன்னும் பலவகையிலும் உதவி செய்தவராவர். எங்கள் பள்ளியின் உறுப்பினர்களாகியும் பெற்றோர்களுமாகிய திருவாளர்கள் டாக்டர் அரசு அவர்களும் அஞ்சலகப் பணிபுரியும் திரு. சுந்தரவடிவேலு அவர்களும் பலவகையில் எங்களுக்கு உதவுவதோடு, அவ்வப்போது ஆக்கப்பணிகளுக்கு இணைய ஆதரவும் தந்து வருகிறார்கள். திருவாளர் வெங்கடகிருஷ்ணன் 1. A. S, அவர்கள் செய்த உதவிகளை என்றும் மறக்கமுடியாது. அரசாங்க உயர் அலுவலர்களிடத்தும் அமைச்சர் போன்றாரிடத்தும் நமது பள்ளியின் உண்மையான உயர்நிலையினை ஒரு பெற்றோராக இருந்து எடுத்துரைத்து வேண்டும் காலத்தி லெல்லாம் ஆவன செய்து ஆதரித்தார்கள். மேலும் பள்ளி விழாக்களிலெல்லாம் குடும்பத்தோடு வந்து பங்கேற்றுச் சிறப்பித்தனர். அப்படியே திருமதி பொன்னையன் அவர்கள் (அமைச்சர் துணைவியாரும்) அமைச்சர். அவர்களும் பள்ளியின் பெற்றோர்களாக உள்ளமையின்