பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i3í அவ்வப்போது பள்ளிக்கு வந்தும் விழாக்களில் பங்கு கொண்டும் அவர்கள் குழந்தைகளை எல்லா விழாக்களிலும் பங்கேற்கச் செய்தும் வேண்டும்போது வழிகாட்டியும் உத்வி யுள்ளார்கள்-உதவுகிறார்கள். ஒருமுறை மாண்புமிகு பொன்னையன் அவர்கள் நானும் முதல்வரும் இல்லாத வேளையில் தம் மகனைப் பார்க்கும் முகத்தான் பள்ளிக்கு வந்து சிறிது நேரம் தங்கிப் பள்ளியின் நடைமுறைகளைக் கவனித்துச் சென்றார்கள். பின் அடுத்தநாள், நான் அவர்களை வீட்டில் சென்று கண்டபோது நானும் முதல்வரும் இல்லாதபோதும் பள்ளி இருக்கும் நிலையினை, மிக அமைதியாகவும் ஒழுங்காகவும் முறையாகவும் நடப்ப தைப் பாராட்டினார்கள். : உறங்குமாயினும் மன்னவன் தன்னொளி கரங்கு தென்டிரை வையகம் காக்குமால்' என்ற திருத்தக்க தேவரின் அடிகளை நினைந்து அந்தவகையில் நடந்து கொண்ட் ஆசிரியர்களையும் ஒழுகிய மா ன வ ர் க ைள யு ம் பாராட்டினேன். இவ்வாறே பல பெரியவர்கள்-பெற்றோர் கள் எங்கள் பள்ளியின் வாழ்விலும் வளர்ச்சியிலும் கருத்திருத்தி ஆவன செய்து வருவதை எண்ணி அவர்களை வணங்கக் கடமைப்பட்டிருக்கிறேன். - - தாய்மார் சிலர் ஆற்றும் கடமையினைக் கடந்த சில ஆண்டுகளாக காணும் நான் அவர்களைப் பற்றிக் கூறாதிருக்கமுடியாது. சில ஆண்டுகளாக ஆசிரியர், பாரதி விழாவினைச் செப்டம்பரில் கொண்டாடி வருகின்றோம். அதில் ஆசிரியர்களும் பெற்றோர்களும் பங்கு கொண்டு பாடுபடும் காட்சியினை என்னால் மறக்கமுடியாது. பல அன்னையர் தாமே வந்து அடிக்கடி முதல்வரைக்கண்டு. செய்ய வேண்டுவனவற்றைத் தெரிந்து, சொல்லி கேட்டு, தாமே பலவற்றிற்கும் செலவு செய்து சிறந்த முறையில் தாமே வேடமிட்டு, நாடகங்கள் நடத்தித் தரும் சிறப்பிப் பினை யாவரும் அறிவர். அதற்கெனப் பெற்றோருக்கு