பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 ஒரு சிறு அளவில் நுழைவுக் கட்டணம் இட்டாலும் அதைப் பெரிதாக மறுத்துப் பேசியும் எழுதியும் காட்டும் ஒருசில பெற்றோர்களுக்கு இடையில் இத்தகைய நல்ல தாயர்தம் உதவியால் நாங்களும் எங்கள் கல்வி அறமும் செம்மையாகப் பணியாற்றுகிறோம் என்பதை மறக்க முடியுமா! இவ்வாறே இன்னும் எத்துணையோ பெற்றோர்கள் வேண்டுங் காலத்தி லெல்லாம் வேண்டும் வகைகளில் உதவிபுரிகின்றார்கள். ஒருசிலர்தம் நல்ல குழந்தைகள் பள்ளி உயர் வகுப்புகளை முடித்து மேநிலைகளுக்குச் சென்றுள்ளனர். இன்று அவர்கள் பள்ளியின் பெற்றோர் இல்லை என்றாலும் என்றும் அவர்கள் செய்த உதவிகளை மறக்க முடியும் கொல்! பள்ளியின் குழந்தை ஒன்று சுற்றுப் பயணத்தின் போது விபத்தில் தாயுடனும் மற்றொரு குழந்தையுடனும் இறக்க அதன் தந்தையார் துன்பந் தோய்ந்த முகத்துடன் பள்ளிக்கு வந்து, அந்தக் குழந்தையின் பேரால் ஒரு நிலைத்த செயலைச் செய்ய விரும்பி, ஆயிரம் ரூபாய் செக் கினைக் கொடுத்த காட்சி ஒரு சோகக் காட்சியாயினும் அவர் எங்கள் பள்ளியில் மற்றவர் செய்யாத வகையில் நிலைத்த அறக் கட்டளை அமைத்ததை எண்ணிப் பாராட்டாதிருக்க முடியுமா? அவர் தன் குழந்தையின் பெயரால், அவர் குறித்த அக் குழந்தை பயின்ற வகுப்பில் முதலில் தேர்ச்சி பெறும் முதல் மாணவருக்கு பரிசளித்து வருகின்றோம். இவ்வாறு சிலரைப் பற்றி எண்ணும் நான் முன்னே குறிப்பிட்ட வகையில் ஒருசிலர் வேறு வகையில் செயலாற்று வதை எண்ணின் வருத்தமின்றேனும் அவர்களின்பால் உள்ளம் கழிவிரக்கம் கொள்ளுகிறது. சேர்க்க எப்படி ஒரு சிலர் வம்பு செய்கிறார்களோ அப்படியே சிலர் தம் பிள்ளைகளைப் பள்ளியிலிருந்து எடுத்துக்கொண்டு போகும் போதும் சில தொல்லைகள தருகின்றனர். பள்ளியின் விதி