பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 களைத் திட்டமாக அச்சிட்டுக் கொடுத்திருந்தபோதிலும், வேறு இலவசப் பள்ளிகளிலோ மற்றப் பள்ளிகளிலோ பலவகைகளில் இடம் பிடித்து, ஆறாம் வகுப்பிற்கு மேல் உள்ள பிள்ளைகள் ஜூன், ஜூலை மாதங்களில் அழைத்துப்போக மாற்றுச்சான்று கேட்டுத் தொந்தரவு செய்கின்றனர். தரவில்லை என்றால்-விதிகளின்படி நடக்க வேண்டும் எனச் சுட்டிக் காட்டினால், யாரையாவது 'சிபார்சு கொண்டு வருகிறார்கள். இவர்களில் பலர் படித்தவர்கள்: பலர் அரசாங்க உயர் உத்தியோகம் வகிப்பவர்; சிலர் பெருஞ் செல்வந்தர்கள்: இருந்தாலும் முறைப்படி நடக்க ஒருப்படுவதில்லை. ஆனால் இவர்களுக் கிடையிலே, நாங்கள் சொல்லாமலேயே, விதிகளைப் படித்து விதிகளின்படியே நடந்துகொள்ளும் நல்லவர்களும் உள்ளமையாலேதான், உண்டால் அம்ம இவ்வுலகம்’ என்று மகிழ்ச்சி கொள்ள வேண்டியுள்ளது. ஒராண்டில் எனக்கு மிகத் தெரிந்தவராக உள்ள ஒருவர், இவ்வளவு கட்டணம் கட்ட வேண்டும் என்று சொல்ல, என்னைக் கட்டச் சொல்லி சான்றிதழ் வாங்கிக் கொண்டு மறுநாள் காசு அனுப்புவதாகக் கூறிச் சென்றார். ஆண்டுகள் பல கழிந்தும் இன்னும் தரவில்லை: நானும் கேட்கவில்லை. பல முறை கண்டு பேசுகின்ற போதிலும் அதைப்பற்றி நான் கேட்பது இல்லை. இப்படியும் சிலர்! பெற்றோர்களில் இன்னும் ஒருவகையானவர்களைக் குறிப்பிட வேண்டும். அவர்களால் எங்களுக்குத் தொல்லை யின்றேனும் குழந்தைகளை அவர்கள் போற்றுவதை எண்ண நெஞ்சம் துணுக்குறுகிறது. இளங் குழந்தைகள் வகுப்புகள் ஐந்தாம் வகுப்புவரை மாலை 3. 45க்கு முடிவடையும். பல பெற்றோர்கள் உடன் வந்து தங்கள் குழந்தைசளை அழைத்துச் செல்வர். ஆனால் ஒரிருவர் மாலை ஆறு அல்லது ஏழு ஆனாலும் சில நாட்களில் வருவதில்லை. நாள் தோறும் நானோ முதல்வரோ இருந்து, எல்லாப் பிள்ளை களையும் வீட்டுக்கு அனுப்பி விட்டுத்தான் நாங்கள் வீடு