பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 செல்வது வழக்கம். எனவே சில நாட்களில் அப்படிப் பெற்றொரும் வராத பிள்ளைகளை நாங்களே காரிலோ அல்லது ஆட்கள் மூலம் சைகிலிலோ அழைத்து விட்டுச் சென்றே பிறகு புறப்படுவோம். வயது வந்த பெண்கள் பள்ளியின் விழாக்கள் அல்லது ஆய்வுகளப் பணிகள் காரணமாக ஏழு அல்லது எட்டு மணிவரையில் தங்க நேர்ந்த போதும், பெற்றோர்கள் யாரையும் துணையாக அழைத் துப் போக அனுப்புவதில்லை. இரண்டு மூன்று முறைகள் பள்ளியின் காரிலேயே அப் பிள்ள்ைகள் அனுப்பப் பெற்றிருக் கிறார்கள். ஒருமுறை இரண்டாம் வகுப்பில் பயிலும் ஒரு குழந்தையை அழைத்துவர மாலை ஏழு மணி வரையிலும் யாரும் வரவில்லை. பிள்ளைகள் முகவரி அனைத்தும் எங்களிடம் இருப்பதாலும், அக் குழந்தைக்குக்குச் சரியான முகவரியினை சொல்லமுடியாததாலும், முகவரியினைக் கண்டுபிடித்து ஏழுமணிக்கு மேல் காரில் நானே அழைத்துச் சென்று அவர்கள் வீடுவரை சென்றேன். வழியில் அவர்கள் வியாபார இடத்தில் குழந்தையின் பெற்றோர் இருவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். குழந்தையை காரிலிருந்து இறக்கிவிட்டதும் இருவரும் மறந்தே போய் விட்டோம்' என்றனர். தம் ஆறு வயதுக் குழந்தையை மறந்து என்னதான் அவர்கள் உலகில் சாதிக்கப் போகிறார் களோ என்ற எண்ணத்தோடு நான் வீடு சென்றேன். 1980-81-ல் நடந்த ஒரு நிகழ்ச்சியினைக் காட்டாவிடின் இப் பகுதி நிறைவுறாது என எண்ணுகிறேன். பள்ளியின் விழாக்களுக்குப் பிள்ளைகள் அனைவரும் தவறாமல் வர வேண்டும் என்பதும் பெற்றோர்கள் விரும்பினால் கலந்து கொள்ளலாம் என்பதும் நியதி. பொதுவாக நம் பள்ளி விழாக்களில் பெரிதும் அதிகமாகப் பெற்றோர் கலந்து கொள்வர். பிள்ளைகள் வர இயலவில்லையானால் விடுப்புக் கடிதம் (leave letter) பெற்றோர் அனுப்புவர். இப்படி அமையும் நெறியிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் 1.ஒருவிழாவில் கலந்து கொள்ளவில்லை. முதல்வர் மறுநாள்