பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 35 அவர்களை கண்டித்து, ஒவ்வொருவரும் பத்து ருபாய் தண்டம் செலுத்த வேண்டும் எனவும், செலுத்தாத வரை யில் வகுப்புக்குச் செல்லலாகாது எனவும் விதித்தனர். பல பெற்றோர்கள் தண்டத் தொகையைத் தாங்களே கொண்டு வந்து செலுத்தி மன்னிப்பும் கூறிச் சென்றனர். எனினும் ஒருசிலர் சில வேண்டத்தகாதவர்களையும் அழைத்துக் கொண்டு வந்து பிள்ளைகளை வகுப்புக்கு அனுப்ப வேண்டு மெனவும் தண்டத் தொகை செலுத்த இயலாது எனவும் ரகளை செய்தனர். பலர் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தனர். எனினும் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் வீண் “கலாட்டா" செய்யவே வந்திருந்தனர். அவருள் இரு பெண்கள் நடந்து கொண்டதை எண்ணியே நான் வேதனை அடைந்தேன். பெற்ற தாயார்; கணவரோடு குடும்பம் நடத்துகின்ற பெண்கள்: அவர்களை இன்று அடையாளமும் காட்ட முடியாது. அவர்கள் யாரென்று இன்றுவரையும் எனக்குத் தெரியாது; நான் தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை; அதை மறந்துவிட்டேன். " அல்லதை அன்றே மறப்பது நன்றல்லவா. ஆயினும் அந்த இருவரும் மகளிர் பண்பாடு கடந்து செய்த செயல்தான் வேதனையை விளைத்தது. தண்டத்தொகை கட்ட வரிசை யில் நின்றிருக்கிற ஆடவர்களை மடக்கி அவர்கள்முன் நின்று அவர்கள் மேல் உராய்ந்து, அவர்கள் குறுக்கே நின்று கட்ட வேண்டாம் என்று தடுத்து, ஒருவர் ஒரிரு ஆண்களைக் கையைப்பிடித்து இழுக்கவும் செய்தனர். இந்தக் காட்சி யினை கண்டு "ஐயோ தமிழ்ப் பெண் சமுதாயமே. பத்து ரூபாய்க்கு இப்படியா சீரழிய வேண்டும்' என்று நைந்தேன். என்னால் வேறு என்ன முடியும்? இவ்வாறு இடர்ப்பட்ட நிலையில் அனைவரும் வருத்தம் தெரிவித்துக் கடிதம் எழுதி முதல்வருக்குக் கொடுத்த பிறகே, வகுப்பிற்குச் செல்ல அனுமதிக்கப் பெற்றனர். எங்கள் பள்ளியில் கட்டுப்பாடு சற்றே அதிகம்தான். அதைப் பலர் விரும்பவும் செய்கின்ற னர். சிலர் மதிக்க மறுக்கின்றனர். அத்தகைய இவ்வாறு தொல்லை தரும் பெரியோர்'களின் தொடர்பு இல்லா